சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு திட்டம்
பெண் குழந்தையின் திருமணம் வயதில் 67 லட்சம் தரக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இன்றிய பதிவில் பார்க்க போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து தகவல்களை பெறுங்கள்.
மத்திய அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு திட்டம் ஆகும். அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு சிறிய அளவிலான தொகையை மாதம் மாதம் முதலீடு செய்து வந்தால். இந்த திட்டத்தினுடைய கால அளவு முடிந்த பிறகு பெறலாம். சரி இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், எப்படி இந்த திட்டத்தில் இணைய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Post office SSA in Tamil:
10 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகள் மட்டும் தான் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டும் தான் கணக்கு திறக்க முடியும். அதுவே ஒரு குடும்பம் என்றால் ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைக்கு இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ஓபன் செய்ய முடியும்.
இந்த அக்கவுண்டை எங்கெல்லாம் ஓபன் செய்யலாம் என்றால் அஞ்சலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அக்கௌன்ட் ஓபன் செய்யலாம்.
இந்த அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னவென்றால் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் முகவரி சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதலீடு செய்து அக்கௌன்ட் ஓபன் செய்யலாம், அதுவே அதிகபட்சம் என்றால் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி எவ்வளவு என்றால் 8% ஆகும்.
இத்திட்டத்தின் டெபாசிட் காலம் 21 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் இந்த 21 ஆண்டில் நீங்கள் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டும் டெபாசிட் செய்து வந்தால் போதும், அதன் பிறகு நீங்கள் எந்த ஒரு தொகையும் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 21 வருடம் முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தீர்களோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 1,875 ரூபாய் செலுத்தி 10,04,000 ரூபாய் அளிக்கும் சேமிப்பு திட்டம்..!
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
மாதம் உங்கள் பெண் குழந்தைக்காக 12,450/- முதலீடு செய்து வந்தால். 15 ஆண்டுகளில் 22,41,000/- ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள், அதற்கான வட்டி 44,75,145/- ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும் தொகை என்று பார்க்கும் போது 67,16,145/- ரூபாய் மெச்சுரிட் தொகை கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் அருமையான காப்பீட்டு திட்டத்தில் மாத தொகையாக 50 ரூபாய் செலுத்தினால் போதும்.
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |