நேரு எழுதிய நூல்கள்
நேரு அவர்கள் குழந்தைகளின் மனதில் பெரும் இடத்தை பிடித்தவர். இவர் குழந்தைகளின் மீது அன்பு கொண்டதால் இவருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டப்படுகிறது. இவை இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். நமது இந்தியா 1947-ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது முதலாவது தலைமை அமைச்சராக பதவி ஏற்றார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நேரு எழுதிய நூல்கள் பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நேரு எழுதிய நூல்கள்:
சுயசரிதை:
இந்தியாவில் நாஜிக் கட்சியார் அரசு செலுத்துவார்களாகில் இந்தியர்களின் கதி எவ்வளவு மோசமாகப் போயிருக்கும் என்று கர்வத்துடனே அதிகாரிகளால் பேசப்பட்டு வந்தது. நாஜிக் கட்சியார் பல வினோதமான தண்டனைகளை உண்டாக்கி அவைகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் எல்லா நாட்டார்களையும் தோற்கடித்து விட்டார்கள். யாரும் அவர்களோடு போட்டி போடுவது எளிதான காரியமல்ல. ஒருக்கால் அவர்கள் இந்தியாவை ஆண்டிருப்பின் நம் கதி இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.
உலக சரித்திரம் இரண்டு பகுதிகள்:
இந்த புத்தகத்தை எழுதும் போது நேரு அவர்கள் சிறையில் இருந்தார்கள். இவருக்கு தெரிந்த தகவல்களை தனது மகளான இந்திரா காந்திக்கு கடிதம் மூலம் எழுதியுள்ளார். அதன் பிறகு 1934-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.
கண்டுணர்ந்த இந்தியா:
நேரு எழுதிய உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, கண்டுணர்ந்த இந்தியா இந்த மூன்று நூல்களும் இந்திய மக்களின் தலைவிதியை புத்துணர்ச்சி பெற செய்திருக்கின்றன.
ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள்:
நேருவின் மகளான இந்திரா காந்திக்கு 10 வயதாக இருக்கும் போது நேரு அவர்கள் கோடை காலத்தை அலகாபாத்தில் கழித்த போது இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பூமி எப்படி, எப்போது உருவானது, மனிதன் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது, உலகம் முழுவதும் நாகரிகங்கள் மற்றும் சமூகங்கள் எவ்வாறு வளர்ந்தன என்ற கதையைச் கூறியுள்ளார்.
APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்…!
நேருவின் கண்டுபிடிப்பு:
இந்த புத்தகம் ஆனது நேருஜி அவர்கள் சிறையில் இருந்த போது எழுதப்பட்டது. இவர் தன்னுடைய நாட்டை நேசித்தத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மரியாதை சொல்லும் விதமாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |