2024 Business Ideas in India
2024 Business Ideas: சுயதொழில் என்பது மற்ற அனைத்தையும் விட தனக்கான ஒரு பொருளாதார நிலையினை உயர்த்துவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் வேலை செய்வது, செய்த வேலைக்கு பணம் வாங்குவது என்பதோடு மட்டும் நின்று விடமால் நம்முடைய தொழிலை நாம் எப்படி மற்றவர்களை காட்டியிலும் முன்னுரிமை படுத்துவது என்ற சிந்தையாக்குள்ளே நம்மை கொண்டு செல்வது சுயதொழில் தான். ஏனென்றால் நமக்கான ஒரு தொழில் என்று ஆகும் போது அதில் கவனமும், சிந்திக்கக்கூடிய ஆற்றலும் அதிகமாக இருக்கிறது.
அதேபோல் எப்படி அதிக வருமானம் மற்றும் லாபம் ஈட்டுவது என்ற வணிக ரீதியான யோசனைகளும் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் இந்த 2023-ஆம் ஆண்டு முடிவடையப்போகும் நிலை வந்துவிட்டதால், அடுத்த ஆண்டாவது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் 2024-ஆம் ஆண்டில் தொடங்கக்கூடிய அருமையான 3 தொழில்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Greeting Cards Business in Tamil:
உங்களுக்கு Greeting cards ரீதியான கலை ஆர்வம் அதிகமாக இருந்தால் அதனை, ஒரு தொழிலாகவே மாற்றிவிடலாம். அதோடு மட்டும் விட்டு விடாமல் பத்திரிக்கைகளையும் நீங்கள் வித விதமாக மாடல் செய்து கொடுக்கலாம். ஏனென்றால் இவை இரண்டுமே வருங்காலத்திலும் மிகவும் டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக தான் இருக்கிறது. ஆகையால் இத்தகைய கலை உங்களுக்கு தெரிந்து இருந்தால் போதும், அதன் மூலமே நல்ல வருமானத்தை பெறலாம்.
Career Coaching Classes in Tamil:
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இன்றைய கலகட்டத்தினை பொறுத்தவரை தனிப்பட்ட ஊதியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி பார்க்கையில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை என்பது கொஞ்சம் அதிகம் தான்.
அதிலும் சிலருக்கு எப்படி வேலை தேடுவது என்ற விவரமே தெரியாமல் இருக்கும். ஆகையால் இவற்றையே நீங்கள் ஒரு ஆரம்பமாக வைத்துக்கொண்டு ஆன்லைன் முறையில் எப்படி வேலை தேடுவது, எந்த வேலை சிறந்தது, எந்த வேலைக்கு என்ன மாதிரியான திறன் வேண்டும் என இவற்றை எல்லாம் நீங்கள் சிறந்த முறையில் கற்று கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் இதற்கு ஒரு ஆளை வேலைக்கு எடுத்தும் கொள்ளலாம்.
Home Catering Services in Tamil:
தற்போது நமக்கு பிடித்த மாதிரியான உணவுகள் நினைத்த நேரத்தில் கிடைத்தாலும் கூட அவை ஆரோக்கியமானதா..? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக தோன்றும். ஆகையால் வேறு வலி இல்லமே இத்தகைய முறையில் உணவினை உண்கிறார்கள்.
அதனால் உங்களுக்கு நல்ல சுவையாக சமைக்க தெரிந்து இருந்தால் மட்டுமே போதும், நீங்கள் வீட்டு முறையில் சாப்பாடு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சமைத்து கொடுத்து நல்ல வருமானம் ஈட்டலாம்.
அதோடு மட்டும் இல்லாமல் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புகுவிழா மற்றும் காதணி விழா என்ற இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் சாப்பாடு செய்து கொடுக்கலாம்.
கடையே இல்லாமல் வருமானம் மட்டுமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் இப்படி தெரியுமா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |