கடையே இல்லாமல் வருமானம் மட்டுமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் இப்படி தெரியுமா..?

Advertisement

Online Clothing Business Plan in Tamil

மனிதனாக பிறந்து விட்டால் உணவு, உடை, உறக்கம் மற்றும் தண்ணீர் என இவற்றை எல்லாம் மிகவும் முக்கியம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி பார்த்தால் உறக்கத்தை தவிர மற்ற அனைத்தையும் நாம் மட்டும் இல்லாமல் அனைவருமே காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை தான் தற்போதைய சூழலில் இருக்கிறது. அப்படி பார்க்கையில் எல்லாமே தொழில் மற்றும் வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து தான் செயல்படுகிறது. இதன் படி பார்த்தால் உணவு, உடை மற்றும் தண்ணீர் ஆகிய இந்த மூன்றுமே அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக தான் அனைவராலும் கருதப்படுகிறது. ஆகவே இந்த மூன்றில் ஒன்றான ஆடை தொழிலை நீங்கள் செய்தால் கைநிறைய வருமானத்தை மட்டும் இல்லாமல் லாபத்தையும் சேர்த்து அள்ளலாம். அந்த வகையில் இத்தகைய ஆடை தொழிலை மற்றவர்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆன்லைன் கடை:

ஆன்லைன் கடை

தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்கு கடை மற்றும் தேவையான மூலப்பொருள் என இந்த இரண்டும் முக்கியமான ஒன்றாக இருந்தது முந்தைய காலங்களில். ஆனால் இந்த காலத்தை பொறுத்தவரை கடை இல்லாமல் உங்களிடம் உள்ள பொருளை மட்டுமே வைத்து ஆன்லைன் முறையில் நல்ல வருமானம் பெறலாம்.

அதனால் துணிக்கடை ஆன்லைனில் எப்படி வைப்பது என்றும், அதனை எவ்வாறு செய்வது என்றும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள்:

முதலில் நீங்கள் எந்த வயதில் உள்ளவர்களுக்கு எந்த பாலினத்தவருக்கு துணிகளை விற்கப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு நல்ல தரமுள்ள துணிகளை பார்த்து Whole Sale முறையில் வாங்கி கொள்ள வேண்டும்.

தொழில் தொடங்க தேவையான ஆவணம்:

  • தொலைபேசி எண்
  • இமெயில் ஐடி
  • GST (Regular)

இவை அனைத்தும் உங்களிடம் இருக்க வேண்டிய ஒன்றும். மேலும் ட்ரடே மார்க் என்பது உங்களது தொழிலுக்கு இருக்க வேண்டும்.

How Start Online Clothing Business:

 how start online clothing business in tamil

  1. இந்த நவீன காலத்தில் ஆன்லைன் கடைகளை திறப்பதற்கு என்று எண்ணற்ற Ecommerce Websites இருக்கிறது. ஆகவே அதில் உங்களுக்கு எவற்றை ஏதுவாக இருக்கும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  2. பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனை மற்றும் விதிமுறைகளின் படி ஆன்லைன் கடையினை திறந்து விடுங்கள்.
  3. அடுத்து உங்களிடம் உள்ள பொருளை அதில் படம் பிடித்து போட்டு அதற்கான விலையினையும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.
  4. இதில் முக்கியமாக பணம் COD, Bank Transfer மற்றும் UPI Payment என இவற்றில் எது வழியாக வருமானம் வரும் என்பதையும் தீர்மானம் செய்து விடுங்கள்.
  5. மேலும் எந்தந்த இடங்களில் உங்களது பொருளை டெலிவரி செய்ய முடியும் என்பதையும் இதில் தெளிவாக கொடுத்து விடுங்கள்.
  6. அவ்வளவு தான் உங்களுக்கான ஆன்லைன் வருமானம் கிடைத்து விடும்.

வருமானம்:

ஆன்லைன் கடையினை பொறுத்தவரை உங்களது வருமானம் என்பது விற்பனை செய்யப்படும் பொருட்களின் அளவை பொறுத்தே வருமானம் அமையும். ஆனாலும் கூட தோராயமாக மாதம் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வருமானம் பெறலாம்.

ஆன்லைன் கடை எதனால் தொடங்க வேண்டும்.. இத்தகைய கடையினால் கிடைக்கும் நன்மைகள் என்ன 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement