Why Start an Online Business in Tamil
ஏன், எதற்கு, எப்படி, எதனால் போன்ற முறையினை கொண்ட கேள்விகள் நமக்குள் அதிகமாக வந்து கொண்டே இருக்கும். அப்படி பார்த்தால் இத்தகைய கேள்வி முறைகள் அனைத்தும் ஒவ்வொரு செயல் அல்லது நடைமுறை வாழ்க்கையினை பொறுத்து மாறுபடும். அப்படி பார்த்தால் தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நடைமுறை வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாக காணப்படும் ஒன்று என்றால் அது ஆன்லைன் தொழில் மட்டுமே.
ஏனென்றால் படிப்பு என்பது இத்தகைய ஆன்லைன் தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் கிடையாது என்ற காரணத்தினால் மிகவும் எளிய முறையில் தனக்கான ஒரு சொந்த ஆன்லைன் கடையினை அமைத்து கொள்கிறார்கள். இதன் படி பார்க்கையில் ஆன்லைன் கடை எதற்காக தொடங்க வேண்டும், இதனால் நமக்கு கிடைக்கபெறும் நன்மைகள் என்ன என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆன்லைன் கடை எதனால் திறக்க வேண்டும்:
உங்களிடம் இருக்கும் குறிப்பிட்ட பொருளை நீங்கள் வசிக்கும் இடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியப்படுத்தவும், உங்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவே ஆன்லைனில் கடை (Website or Store) திறக்க வேண்டும்.
மேலும் வாடிக்கையார்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்யவும், எதிர்காலத்தில் மாறப்போகும் தொழில் முறையினை முன்பே நீங்கள் அமைத்துக் கொள்ளவும் ஆன்லைன் ஸ்டோர் அவசியம் திறக்க வேண்டும்.
வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் E-Commerce பிசினெஸ் செய்வது எப்படி
ஆன்லைன் ஸ்டோர் திறப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
கட்டுப்பாடற்ற நேரம்:
ஆன்லைன் கடை என்பது உங்களுக்கு கட்டுப்பாடற்ற நேரத்தினை அளிக்கிறது. அதாவது குறிப்பிட்ட நேரம் மட்டுமின்றி 24*7 மணி நேரமும் உங்களது கடை சேவையில் இருக்கும். வாடிக்கையாளர்கள் உங்களது ஸ்டோரினை எந்த நேரத்திலும் பார்க்க மற்றும் வாங்கவும் முடியும். அது மட்டுமின்றி அவர்களுக்கு நீங்கள் எந்த பொருள் வைத்துள்ளீர்கள் அவற்றின் விலை என்ன? என்பது முதற்கொண்டு தெளிவாக தெரியும். பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தான் உங்களது கடையினை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி உங்களது ஆன்லைன் ஸ்டோர் எப்போதும் சேவையிலேயே இருக்கும்.
கடன் இல்லா தொழில்முறை:
நேரில் கடை வைப்பதன் மூலம் தெரிந்த வாடிக்கையாளர் மற்றும் புதிய வாடிக்கையாளர் என யார் வேண்டுமானாலும் கடன் வைத்து கொள்ளலாம். ஆனால் ஆன்லைன் கடையை பொறுத்தவரை இந்த பிரச்சனை கிடையாது. உங்களுடைய பொருள் 10 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தாலும் அதற்கான காசு வந்துவிடும்.
வாடிக்கையாளர்களை விரிவடைய செய்யும்:
ஆன்லைன் ஸ்டோர் மூலம் உங்களது வாடிக்கையாளர்களை விரிவடைய செய்யும். அதாவது உலகம் முழுவதிலும் இருந்து வாடிக்கையாளர்களை பொருளின் தரத்தினை மட்டுமே வைத்து வர செய்கிறது.
பொருளின் தரம்:
நீங்கள் விற்பனை செய்யும் பொருளின் தரத்தினை நீங்கள் அறிந்ததோடு மட்டும் விட்டுவிடாமல் அவற்றை புகைப்படம் வாயிலாக மாற்றவருக்கு தெரியப்படுத்தி இதன் வாயிலாக அதிக வருமானத்தை ஈட்டலாம்.
செலவு செய்ய வேண்டாம்:
இதில் ஆன்லைன் ஸ்டோர் திறப்பதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியது இல்லை. மேலும் மின்சார கட்டணம், கடைக்கான வாடகை கட்டணம் என இவற்றை எல்லாம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் உங்களது கடையை பாதுகாக்க கேமராக்கள் வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
கடைக்கான பாதுகாப்பு:
பொருட்கள் திருட்டு, பணம் திருட்டு அல்லது கொள்ளை என இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இதில் மிகவும் குறைவு. ஆகவே ஒருமுறை திறந்த உங்களது ஆன்லைன் கடை எப்போதும் பாதுகாப்பு தன்மையுடன் காணப்படும்.
வருமானம்:
வருமானத்தை பொறுத்தவரை நீங்கள் ஒற்றை முறையில் இல்லாமல் 3 முறைகளில் ஈட்டலாம்.
- COD
- Bank Transfer
- UPI Payment Method
புதிய அனுபவம்:
பெயர், முகவரி என இவற்றை எல்லாம் தெரியாத புதுப்புது நபர்களுடன் உங்களது தொழிலை செய்யலாம். இது அன்றாடம் கல்லூரியில் சென்று படித்திடாத புதிய அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும்.
டெலிவரி வசதி:
ஆன்லைனில் கடை வைத்தாலும் கூட எந்தந்த இடங்களில் உங்களது பொருள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதை கூட நீங்கள் இதில் தீர்மானித்து கொள்ளலாம்.
விவரப்பட்டியல் (Analytics Reports):
மேலும் அன்றாட விற்பனை போக மீதம் எவ்வளவு பொருள் இருக்கிறது, என்னென்ன பொருள் விற்பனை ஆகிறது என இதுபோன்ற தரவுகளை கஷ்டப்படாமல் அனைத்தினையும் எளிய முறையில் பெற உதவுகிறது.
இத்தகைய நன்மைகள் அனைத்தும் நேரில் ஒரு நபர் கடையை வைப்பதை காட்டிலும் ஆன்லைன் முறையில் கடை வைப்பதாலேயே கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உங்கள் வர்த்தகத்தை ஆன்லைனில் கட்டாயம் கொண்டுசென்று அதிக வாடிக்கையாளர்கள் மட்டும் லாபத்தினை அடையவும்!.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |