Plastic Items Business Ideas in Tamil
சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் என்ன தொழில் செய்வது, அதற்கான முதலீடு, மூலப்பொருள் போன்றவை பற்றிய புரிதல் பலரிடம் இல்லை. அதனால் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி காண்போம்.
என்ன சுயதொழில் செய்வது:
வீடு என்று இருந்தாலே அதனை அலங்கரிப்பதற்கு பொருட்களை வாங்கி வைப்போம். அப்படி அதிகமாக பயன்படுத்த கூடிய பொருள் என்றால் பிளாஸ்டிக் பொருட்கள் தான். ஏனென்றால் இவற்றில் நிறைய வகைகள் இருக்கும் அதனாலேயே பெண்களுக்கு பிடிக்கும். என்ன தான் விலை குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்துவார்கள்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவைப்படும். நீங்கள் பெரிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் பெரிய இடமாக இருக்க வேண்டும், அதுவே சின்ன கடை என்றால் சிறிய கடை போதுமானது.
சொந்த இடமாக இருந்தால் வாடகை பிரச்சனை இருக்காது, இல்லையென்றால் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
முக்க்கியமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். அப்போது தான் விற்பனை நடைபெறும், எடுத்துக்காட்டிற்கு பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பார்த்து வைக்க வேண்டும்.
குறைந்த முதலீட்டில் கைநிறைய லாபம் தரக்கூடிய EverGreen Business……
மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பிளாஸ்டிக் பொருட்கள் தான். சிறியது முதல் பெரியது வரைக்கும் உள்ள அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்.
நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் பொருட்களை Wholesale கடையில் வாங்கி கொள்ள வேண்டும். இதனை வாங்குவதற்கு 10,000 ரூபாய் தேவைப்படும்.
வருமானம்:
இந்த பிளாஸ்டிக் பொருட்களில் நிறைய வகைகள் இருப்பதால் வருமானம் என்பது மாறுபடும். அது போல விற்பனையை பொறுத்தும் வருமானம் மாறுபடும். அதனால் தோராயமாக மாதந்தோறும் 20,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |