யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

Advertisement

Low Investment Business Ideas 2024

இக்காலத்தில் தொழில் தொடங்க பல வழிகள் இருந்தாலும், என்ன தொழில் தொடங்குவது.? என்ன தொழில் தொடங்கினாள் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற குழப்பம் இருந்துகொண்டே தான் இருக்கும். இதனால் ஒவ்வொரு தொழிலாக யோசித்து அதனை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது, கொட்டை பாக்கு (Betel Nut) தொழில் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

Betel Nut Business Ideas in Tamil:

கொட்டை பாக்கு பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, பீடா போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்ய பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கொட்டை பாக்கு நமக்கு தெரியாத பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதன் தேவை அதிகமாக இருப்பதால் இதனை நாம் தொழிலாக எடுத்து செய்து வரலாம்.

 Betel Nut Business Ideas in Tamil

இந்த தொழிலை நீங்கள் Wholesale பிசினெஸ் ஆக செய்து வரலாம். அதாவது, Betel Nut எங்கு குறைவான விலைக்கு கிடைக்கிறதோ அங்கு சென்று மொத்தமாக வாங்கி கொள்ளுங்கள்.

இது, மூட்டை கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் விலை தோராயமாக 350 ரூபாய், 250 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. எனவே, மூட்டை கணக்கில் வாங்கி கொள்ளுங்கள்.

அடுத்து, இதற்கு முக்கிய மூலப்பொருளாக மெஷின் தேவைப்படும். மெஷினின் விலை 15 ஆயிரம் ஆகும். எனவே, உங்களுக்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 20 ஆயிரம் வரை தேவைப்படும்.

இந்த தொழிலுக்கு Demand அதிகம் அதனால இப்போவே ஸ்டார்ட் பண்ணுங்க..

இப்போது, வாங்கி வந்த Betel Nut (பாக்கு) மெஷினில் போட்டு உடைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை, நீங்கள் விரும்பிய 100 கிராம் பாக்கெட், 200 கிராம் பாக்கெட், 1 கிலோ, 2 கிலோ பாக்கெட் என பேக் செய்து கொள்ளுங்கள்.

இதனை நீங்கள் பேக்கரி, இனிப்பு பலகாரங்கள் செய்யும் இடங்கள், ஆன்லைன் கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டார் போன்றவற்றில் ஆர்டர் எடுத்து மொத்தமாக விற்பனை செய்து வரலாம்.

இத்தொழில், உணவு சார்ந்த தொழில் என்பதால், Food Safety and Standards Authority of India (FSSAI) சான்றிதழ் அவசியமான ஒன்று.

100 கிராம் Betel Nut விலை ஆன்லைன் கடைகளில் தோராயமாக 200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, நீங்கள் இதனை விட குறைந்த விலையில் விற்பனை செய்தால் கூட நல்ல வருமானம் பெறலாம்.

தினமும் 2000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் தரக்கூடிய தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement