என்றைக்கும் கொடி கட்டி பறக்கும் தொழில்..! மாதம் 50 ஆயிரம் வரை அசால்ட்டா சம்பாதிக்கலாம்..!

Advertisement

Monthly 50000 Income Business Ideas

நாம் அனைவருமே நம் எதிர்கால தேவைக்காகவும் வாழ்க்கையின் வளர்ச்சிகாக்கவும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், எந்த தொழில் தொடங்குவது, எப்படி தொடங்குவது உள்ளிட்ட பல விவரங்கள் நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தொழில் ஐடியாக்களை வழங்கி வருகிறோம். அதேபோல் இப்பதிவிலும் சூப்பரான ஒரு தொழில் ஐடியாவை பற்றி பாக்கலாம் வாங்க.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா என பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு முதலாவதாக பயன்படுவது பத்திரிக்கை தான். பொதுவாக, ஒரு வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றால், அது பத்திரிகையில் இருந்துதான் தொடங்கும். எனவே இதனையே நாம் தொழிலாக செய்தால் நல்ல வருமானத்தை பெறலாம்.

அதாவது Invitation Printing Business பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Start a Wedding Invitation Printing Business in Tamil:

இந்த தொழிலை நீங்கள் சிறிய அளவில் தொடங்குகிறீர்கள் என்றால் உதாரணமாக ஒரு 2 முதல் 5 லட்சம் வரை உங்களுக்கு முதலீடு தேவைப்படும். அதுவே நீங்கள் பெரிய அளவில் தொடங்குகிறீர்கள் என்றால் அதற்கேற்ப முதலீடும் அதிகமாக தேவைப்படும்.

 how to start a wedding invitation printing business in tamil

இந்த தொழிலுக்கு தேவையான இடம் என்று பார்த்தால், நீங்கள் உங்கள் வீட்டிலே இந்த தொழிலை தொடங்கலாம் அல்லது நல்ல மக்கள் புழக்கம் அதிக உள்ள இடமான பேருந்து நிறுத்தம், துணி கடை, திருமண மண்டபம், நகர்ப்புறம் போன்ற இடங்களில் தொடங்கினால் நல்ல வருமானம் பெறலாம்.

அடுத்து, இத்தொழிலை தொடங்க நீங்கள் முதலில் ஒரு நல்ல இடமாக பார்த்து தொழில் தொடங்க வேண்டும். பிறகு, பத்திரிக்கை பிரிண்ட் செய்ய தேவையான பொருட்களான மெஷின், பேப்பர், டிசைன் கொடுக்க தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கி கொள்ள வேண்டும்.

முக்கியமாக, உங்கள் தொழிலை மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தும் விதமாக உங்கள் தொழில் பற்றிய ஒரு விசிடிங் கார்டு தயார் செய்து அதனை உங்களுக்கு தெரிந்தவர்கள், உங்கள் ஊர் மற்றும் ஊருக்கு அருகில் உள்ளவர்கள் என அனைவரிடமும் இதனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களது பிசினெஸ் ஆனது நன்கு வளர்ச்சி அடையும்.

அடுத்து கிடைக்கக்கூடிய வருமானம் என்று பார்த்தல் விசேஷ காலங்களில் இத்தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். அதாவது அதிகமான ஆர்டர் வரும். உதாரணமாக, ஒரு பத்திரிகையின் விலை 10 ரூபாய் முதல் தொடங்குகிறது. எனவே நீங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 50 ஆர்டர் எடுக்கிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் உங்களுக்கு வருமானமாக கிடைக்கும்.

குறிப்பு: தொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கு ஒரு விதமான ஐடியாக்களை தெரிவிப்பதற்காகவே இப்பதிவு. முக்கியமாக இப்பதிவில் கூறப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும்.

எதிர்காலத்தில் இதனுடைய தேவை அதிகமா இருக்கு அதனால இப்போவே தளத்தை போட்டு முன்னடி இருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement