Rose Water Making Business in Tamil
இந்த உலகில் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாதவர்களை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் தான் அனைவருமே தங்களது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலைக்கு செல்வதை விட தானே தனக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஏதாவது ஒரு சுயதொழிலை செய்வது தான் மிக மிக பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு என்ன தொழில் சுயதொழி தொடங்கினால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான ரோஸ் வாட்டர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த தொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Rose Water Making Business in Tamil:
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டம் முதல் இன்றைய காலகட்டம் வரை இந்த ரோஸ் வாட்டர் பலவகையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ரோஸ் வாட்டர் கடவுளுக்கு அபிஷிகம் செய்வது முதல் பல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் மற்றும் பலவகையான உணவுகளில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே நீங்கள் இந்த ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.
10 மணிநேரம் உட்காந்திருந்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பன்னீர் ரோஜா பூக்கள், நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், Rose Water Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Packing Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதன் ஆரம்ப விலை 1000 ரூபாய் ஆகும். அதேபோல் Rose Water Making Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.
தேவையான ஆவணங்கள் மற்றும் இடவசதி:
நீங்கள் தயாரிக்கும் ரோஸ் வாட்டரையை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் இது ஒரு உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் இந்த தொழில் செய்வதற்கு உங்களின் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் கூட போதும்.
8 மணிநேரம் வேலை செய்தால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில் இது தான்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பன்னீர் ரோஜா பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனை Rose Water Making Machine-னில் போட்டு அதில் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேர்த்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான ரோஸ் வாட்டரை தயாரித்து அளித்துவிடும்.
பிறகு அதனை நீங்கள் Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயாரித்து வைத்துள்ள ரோஸ் வாட்டரை நாட்டு மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட் மளிகை கடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் Online மூலமாக விற்பனை செய்யலாம்.
ஆண்டுமுழுவதும் Demand-ம் அதிக லாபமும் கிடைக்க கூடிய தொழில் இதுதான்
வருமானம்:
பொதுவாக கடைகளில் தோராயமாக 1 லிட்டர் ரோஸ் வாட்டர் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால், ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 30 லிட்டர் ரோஸ் வாட்டரையை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,000 ரூபாய் – 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
எனவே இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |