Trending Business
நாமும் எப்போதுமே சொந்தமாக தொழில் செய்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பது தான் பலருடைய சிந்தனையாக இருக்கும். அப்படி தொழில் செய்யலாம் என்றால் எந்தமாதிரியான தொழில் செய்யலாம். அது எந்த அளவு வெற்றியடையும் என்பது நமது குழப்பமாக இருக்கும். அப்படி நாம் ஒரு தொழிலை தேர்ந்து எடுத்து விட்டோம். என்றால் அது இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் தான் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் Trending ஆக இருக்கின்ற ஒரு Business-ஐ பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அது என்ன தொழில் அதனை தொடங்குவது எப்படி மற்றும் எந்தெந்த இடத்தில் விற்பனை செய்வது என்று விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கைநிறைய வருமானம் தரும் தொழில்:
வரும்காலங்களில் கிளவுட் கிட்சன் தொழில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது.
அனைத்தும் ஆன்லைன் என்னும் சூழல் உருவாக்கிய பின்னர் எதற்கு தயங்க வேண்டும். வரும்காலங்களில் இணையத்தின் சேவை இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்பொழுது நாம் மாறுவதற்கு பதிலாக இப்போதே அதற்கான முயற்சியில் இறங்கினால் பிறக்காலத்தில் நல்ல வருமானம் பார்க்கலாம்.
Cloud Kitchen என்றால் என்ன ?
கிளவுட் கிட்சன் என்பது இன்று நாம் நமக்கு தேவையான உணவுகளை swiggy போன்ற தளங்களில் மூலம் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் நமக்கான உணவை தேர்வு செய்கின்றோம். அது நமது இருப்பிடம் தேடிவருகிறது.
இங்கு உணவகங்களுக்கு முக்கிய பணிகள் உள்ளன. உணவகங்கள் மக்களுக்கு நேரடியாகவும் உணவுகளை தங்களின் உணவகங்களில் விற்கின்றனர். Swiggy தளங்கள் மூலமாகவும் விற்கின்றனர்.
ஆனால் Cloud Kitchen என்பது உணவுகளை தயாரிக்க இடம் மற்றும் அதற்கான மூல பொருட்கள் கொண்ட ஒரு இடமாகவும் அங்கு உணவுகள் தயாரிக்க மட்டும் செய்து. தயாரிப்படும் உணவுகள் இணையத்தில் வெளியிட்டால் இணையம் மூலம் மக்கள் தங்களுக்கான உணவை தேர்வு செய்வார்கள் அதனை அவர்களின் இருப்பிடத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும்.
Cloud கிட்சன் மூலம் விற்பனை செய்யும்போது நமக்கு அதிக இடம் தேவை இல்லை. நமது வீட்டு சமையலறையை போதுமானது. இவ்வாறு செய்யும்போது செலவுகளும் குறையும்.
வீட்டிலிருந்து கிளவுட் கிட்சன் பிசினஸ் எவ்வாறு தொடங்குவது?
இடம்:
உங்கள் வீட்டு சமையலறை போதுமானது. இல்லையென்றல் தனியாக ஒரு கிட்சன் உருவாக்கி கொள்ளலாம்.
உபகரணங்கள் :
உங்களின் உணவு வகைகளை தயாரிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான மூல பொருட்கள் போதுமானது.
நீங்கள் உங்களின் உணவு பட்டியலே இணையத்தில் வெளிட்ட பின்னர் வரும் ஆர்டர்க்கு தகுந்தவாறு சமையலை செய்யலாம்.
உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் :
உணவு பொருட்கள் செய்யும் போது உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுத்தமான நீர், உணவுபொருட்கள் என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
விநியோகம் :
நீங்கள் தயாரித்த உணவுகளை வாடிக்கையாளருக்கு சரியான நேரத்தில் சரியான தரத்தில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். முதலில் டெலிவரி செய்ய நம்பகமான ஆட்களை பயன்படுத்தலாம். தொழில் வளர்ச்சி அடைந்த பின்னர் Swiggy போன்ற தளத்தின் மூலம் டெலிவரி செய்யலாம்.
வருமானம்:
இதில் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நீங்கள் முதலீடு செய்யும் தொகையை கண்டிப்பாக 6 மாதங்களில் நீங்கள் லாபமாக பெற்றுவிடலாம். உங்களின் உணவு வகைகள் மக்களுக்கு பிடித்தமானதாக மாறிவிட்டால் காலத்திலே நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து விடலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |