Canara Bank Car Loan Eligibility in Tamil
இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்க விற்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் கடன் பெற உள்ளீர்கள் என்றால் அந்த கடன் பெறுவதற்கான தகுதிகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு வங்கியில் பெரும் பல்வேறு கடன்களுக்கான தகுதிகளை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் வாகன கடன் பெறுவதற்கான தகுதிகளை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தகுதிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ICICI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Canara Bank Car Loan Eligibility Criteria in Tamil:
கனரா வங்கியில் வாகனக் கடனை பெறுவதற்கான தகுதிகள் கீழே கூறப்பட்டுள்ளன:
- சுயதொழில் செய்பவர்கள் அல்லது தொழில் வல்லுநர்கள் அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் கார் கடனைப் பெற தகுதியுடையவர்கள்.
- இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) கனரா வங்கியில் கார் கடனைப் பெற தகுதியற்றவர்கள்.
- புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களும் கனரா வங்கியில் கார் கடனைப் பெற தகுதியுடையவை ஆகும்.
- ஊதியம் பெறும் நபர்கள் குறைந்தபட்சம் மொத்த சம்பளம் ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் இருக்க வேண்டும்.
- தொழில் வல்லுநர்கள், புகழ் பெற்ற நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் சராசரி மொத்த ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இந்த சராசரி கடந்த 3 ஆண்டுகளின் அடிப்படையில் மற்றும் ITAO/ITR இன் படி உள்ளது.
- நல்ல கிரெடிட் ஸ்கோர் பெற்றிருக்க வேண்டும். அதாவது 750 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அவர்கள் தான் வாகன கடன் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு கனரா வங்கியில் 5.5 லட்சம் கார் லோன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா
இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க
SBI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளவும்
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 | Eligibility |