சுடுகாட்டில் மண் பானை உடைக்க காரணம்
நண்பர்களுக்கு வணக்கம்..! நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் பயனுள்ள தகவல்களை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். அதற்கு தான் நம் பொதுநலம் பதிவு உள்ளதே. நம் பதிவில் தினமும் தினமும் ஒரு பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அது என்ன தகவல் என்று மேல் படித்துருப்பீர்கள். இருந்தாலும் சொல்கிறேன், சுடுகாட்டில் சடலத்தை சுற்றி வந்து மண் சட்டியை உடைக்க காரணம் என்ன தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும் |
சுடுகாட்டில் மண் பானை உடைக்க காரணம் தெரியுமா..?
பொதுவாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்ட ஓன்று தான். எனவே பிறப்பு என்று ஓன்று இருக்கும் போது இறப்பு என்பதும் இருக்கும்.
சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இப்போது நம் பதிவிற்கு வருவோம். பொதுவாக ஒரு வீட்டில் துக்கம் என்றால் அந்த வீட்டில் இறந்தவருக்கு அனைத்து சடங்குகளும் செய்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்வார்கள்.
இப்படி இறந்தவருக்கு இறுதி சடங்குகள் செய்வது வழக்கம் தான். இப்படி செய்வார்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
அப்படி இறந்தவரை சுடுகாட்டிற்கு தூக்கி சென்று, அங்கு வைத்தும் சில சடங்குகள் செய்வார்கள். அதாவது இறந்தவரின் மகன் அல்லது யாரோ ஒருவர், தண்ணீர் நிறைந்த சட்டியை தன் தோலில் வைத்து இறந்தவரின் உடலை சுற்றி 3 முறை வலம் வருவார். அப்படி வலம் வந்த பின் தன் தோலில் இருக்கும் மண் சட்டியை கீழே உடைப்பார்கள்.
இதை நாம் நேரில் பார்க்கவில்லை என்றாலும் டீவியில் பார்த்திருப்போம். ஆனால் என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? ஏன் இப்படி உடைக்கிறார்கள் என்று..?
அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
இறந்தவரின் உடல் இடுகாட்டை அடைந்ததும், இறந்தவரின் சடலத்தை சுற்றி வந்து “இனி குடிப்பதற்கும் உண்பதற்கும் ஒன்றும் இல்லை” என்பதை உணர்த்துவதற்காக தான் சடலத்தை சுற்றி வந்து மண் சட்டியை உடைக்கிறார்கள்.இதுவே இதற்கான காரணமாகும்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |