கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

scientific reasons for bad omens in tamil

கெட்ட சகுனங்கள்

வணக்கம் நண்பர்களே..! அனைவருடைய வீட்டிலும் நல்ல சகுனம் கெட்ட சகுனம் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அதில் கெட்ட சகுனங்கள் என்று மனிதர்கள் நிறைய சொல்லிக்கொண்டே போவார்கள். வீட்டில் கண்ணாடி உடைவது, நகம் வெட்டுவது, நாய் ஊளை விடுவது என்று அடுக்கி கொண்டே போவார்கள். ஆனால் உண்மையில் இவை எல்லாம் கெட்ட சகுனங்கள் கிடையாது. அதை நினைத்தும் நாம் பயப்பட வேண்டாம். இந்த கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை பற்றி இன்றைய பதிவு உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. இன்றைய பதிவை முழுவதுமாக படித்து தெரிந்ததுகொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

கெட்ட சகுனங்களுக்கான அறிவியல் காரணம்:

பூனை குறுக்கே செல்வது:

பூனை குறுக்கே செல்வது பெரும்பாலான மக்கள் கெட்ட சகுனம் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் முன்னோர்கள் காலத்தில் வண்டி, கார் எதுவும் இல்லாததால் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டியில் பயணம் செய்வார்கள்.

அப்படி பயணம் செய்யும் போது பூனை குறுக்கே வந்தால் அதனுடைய கண்ணை பார்த்த மாடு அல்லது குதிரை பயந்து இருக்கும் என்பதால் சிறிது நேரம் அதை தண்ணீர் குடிக்க வைத்து அலைத்து செல்வார்கள்.

கண்ணாடி உடைதல்:

கண்ணாடி கீழே உடைவதற்கான அறிவியல் காரணம் என்பது கண்ணடி விலை உயர்ந்த பொருட்களாக இருப்பதால் அது கீழே விழுந்து உடைந்தால் மீண்டும் அதை வாங்குவது கஷ்டம் மற்றும் உடைந்த கண்ணாடி துகள்கள் காலில் குத்தினால் காயம் ஏற்படும் இந்த இரண்டு காரணத்திற்காக கண்ணடி கீழே விழுந்தால் கெட்ட சகுனம் என்று சொல்வது முன்னோர்களின் கருத்து.

கண்கள் துடிப்பது நல்லதா கெட்டதா:

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நம்முடைய கண்கள் துடிக்கிறது. இதுவே கண்கள் துடிப்பதற்கான அறிவியல் காரணமாக சொல்லப்படுகிறது.

இரவில் நகம் வெட்டலாமா:

முன்னோர்கள் காலத்தில் மின்சார வசதி பெரும்பாலும் இருக்காது. அதனால் இரவு அல்லது மாலை நேரங்களில் நகம் வெட்டும்போது நக துகள்கள் கீழே விழுந்து குழந்தைகள் வாயில் எடுத்து வைத்து விடும் என்பதால் அதனை கெட்ட சகுனமாக கூறப்படுகிறது என்பதே இதற்கான அறிவியல் காரணம் ஆகும்.

இறந்த வீட்டிற்கு சென்று வந்தால் குளிப்பதற்கான காரணம்:

இறந்தவர் உடம்பில் பாக்டீரியாக்கள் அதிக அளவு இருக்கும். அப்போது நாம் அந்த வீட்டிற்கு போகும் போது கெட்ட பாக்டீரியாவால் நமக்கு உடல்நல குறைபாடு வரும் என்ற அறிவியல் காரணத்தினால் இறந்த வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

வீட்டு வாசலில் எலுமிச்சை பழம்:

வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவதனால் திருஷ்டி போகும் என்று சொல்வார்கள். ஆனால் எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் வீட்டுக்குள் வரும் பூச்சினை கொன்று நம்மை பாதுகாப்பாக வைக்கிறது என்பதே அறிவியல் காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா..! சுழிகளின் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts