கருப்பு நிறம் அபசகுனமா..?
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் நம் முன்னோர்கள் ஏதாவது ஒரு காரணத்தை மறைத்து வைத்திருப்பார்கள். அப்படி நம் முன்னோர்கள் மறைத்து வைத்த விஷயங்களை நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் என்ன காணப்போகின்றோம் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி நம்மில் பலரும் ஏன் கருப்பு நிறத்தை அபசகுனமாக நினைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை இந்த பதிவில் காண்போம்.
வீட்டிற்கு யாராவது வந்தால் ஏன் தண்ணீர் தருகிறோம்.. அறிவியல் காரணம் தெரியுமா
கருப்பு நிறத்தை அபசகுனமாக பார்க்க காரணம் என்ன..?
பொதுவாக இப்போது இருக்கும் காலகட்டத்தில் பலருக்கும் பிடித்த நிறமாக இருப்பது இந்த கருப்பு தான். அவ்வளவு ஏன் நம்மில் பாதி பேருக்கு பிடித்த நிறம் கருப்பு தான். கருப்பு நிறத்தை பெருமைபடுத்தும் அளவிற்கு பாடல் கூட இருக்கிறது. அவ்வளவு ஏன் நம் தமிழர்களின் உண்மையான நிறம் கூட கருப்பு தான்.
ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கருப்பு நிறத்தை அபசகுனமாக பார்த்தார்கள். வெளியில் செல்லும் போது கருப்பு நிறத்தில் கூட உடை அணிந்து செல்லமாட்டார்கள்.
அதை பின் பற்றி வந்த நம் தாத்தா பாட்டி கூட, கருப்பு நிறத்தில் உடை அணிய கூடாது என்று சொல்வார்கள். அவர்களிடம் காரணம் கேட்டால், கருப்பு அபசகுனமான நிறம், இது கடவுளுக்கு உகந்தது அல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையான காரணம் இது கிடையாது.
திருமணமானவர்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிக்கிறார்கள் தெரியுமா
பொதுவாக நம் அனைவருக்குமே தெரியும். கருப்பு நிறம் சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொல்லும் தன்மை கொண்டது. இப்படி இருக்கையில் நாம் கருப்பு நிறத்தில் உடை அணிந்து வெளியில் சென்றால், அது நம் உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதுவே வெள்ளை நிறத்தில் சூரிய கதிர்கள் பட்டால் அது எல்லாவற்றையும் எதிரொலித்து விடும். இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் கருப்பு நிறத்தில் உடை அணிந்து வெளியில் செல்ல கூடாது என்று சொன்னார்கள்.
மேலும் இந்த காரணத்தை கூறினால், யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் கருப்பு நிறம் அபசகுனம் என்று கூறினார்கள்.
ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது.. உண்மை என்ன தெரியுமா..
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |