துளசி செடியை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Why do they go around the basil plant in tamil

Scientific Reason Behind Circling The Basil Plant

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அறிவியல் காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சரி பெரும்பாலும் மக்கள் ஏன் துளசி செடியை சுற்றி வருகிறார்கள். இதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.

ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

துளசி செடியை ஏன் சுற்றி வருகிறார்கள்..? 

Why do they go around the basil plant

நாம் பெரும்பாலும் திரைப்படங்களில் மற்றும் ஐயர் வீடுகளில் பார்த்திருப்போம். இதுபோல துளசி செடியை சுற்றி வருவார்கள்.

அந்த காலத்தில் வாழ்ந்த அனைவருமே அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு துளசி செடியை சுற்றி வருவார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் ஒரு சில ஐயர் வீடுகளில் மட்டுமே இதை கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஏன் அப்படி சுற்றி வருகிறார்கள் என்று பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். நாம் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஏன் அப்படி சுற்றி வருகிறார்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் துளசி செடி தெய்வம் குடியிருக்கும் செடி அதனால் தான் சுற்றி வருகிறார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால், நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் எப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதோ அதேபோல இதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.

இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

 

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்த ஒரு மூலிகை செடி ஆகும்.  பொதுவாக தாவரங்கள் அனைத்தும் காற்றில் உள்ள கார்பன்-டை- ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதுபோல துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிகவும் அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மையை கொண்டுள்ளது. 

துளசி செடியானது சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தை சுத்தப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது என்று கூறலாம். அதிகாலையில் அதாவது மூன்று மணி முதல் ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள்.

இந்த நேரத்தில் தான் இயற்கையின் அத்தனை அம்சங்களும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும். அதேபோல இந்த நேரத்தில் தான் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் துளசி செடி வெளியிடும் சுத்தமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கலாம். அதனால் தான் அந்த காலத்தில் துளசி செடியை சுற்றி வந்தார்கள்.  

இதுவே இதற்க்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் ஆகும்.

மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts