வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வலிப்பு நோயில் ஒருவர் அவதிப்பட்டால் அவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். வலிப்பு நோய் என்பது எதிர்ப்பாராத நேரத்தில் வர கூடியது. நீங்கள் சாலையில் செல்லும் போது பல நபர்களுக்கு வலிப்பு நோய் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களுக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்று அறிந்திருக்க மாட்டீர்கள். இனிமேல் எப்படி முதலுதவி செய்யவேண்டும் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வலிப்பு எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக நம் உடலில் மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக இயல்பாகவே நம் உடலில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.
ஏதாவது ஒரு சில காரணத்தினால் மூளையில் உண்டாகிற அதிக அழுத்தத்தின் காரணமாக இந்த மின்சாரம் அபரிவிதமாக உருவாகி ஒரு மினி புயல் போல் கிளம்புகிறது. இது நரம்பு வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படும் பொழுது அந்த சமயத்தில் உடல் உறுப்பு இயக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கை மற்றும் கால்கள் இழுத்து கொண்டு வலிப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
வலிப்பு முதலுதவி:
முதலில் வலிப்பு வந்தவுடன் அவர்களை ஒரு பக்கமாக படிக்க வையுங்கள். எதற்காக இப்படி செய்கிறோம் என்றால் வலிப்பு வந்தவர்களுக்கு வாந்தி ஏற்படும். அவர்கள் நேராக படித்திருந்தால் வாந்தி வெளியேறாமல் சுவாசத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் தான் ஒரு பக்கமாக படுக்க சொல்கிறார்கள்.
அடுத்து வலிப்பு வந்தவர்களின் அருகில் கத்தி அல்லது கூர்மையான பொருட்கள் இருந்தால் அகற்றி விடுங்கள். அவர்கள் கண்ணாடி அணிந்திருந்தால் அதையும் அகற்றி விடுங்கள்.
பிறகு அவர்கள் அணிந்திருக்கும் ஆடை இறுக்கமாக இருந்தால் கழட்டி விடுங்கள். இவர்களை சுற்றி காற்றோட்டமாக வைத்து கொள்ளுங்கள். அவர்களின் வாயை கடித்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு துணியை சுற்றி வாயில் வையுங்கள்.
வலிப்பு வந்ததும் செய்ய கூடாதவை:
வலிப்பு வந்ததும் அவர்களின் வாயில் தண்ணீர் ஊற்றுவதோ அல்லது ஸ்பூனை வாயில் வைக்கவோ கூடாது.
இன்னொன்று கையில் சாவி அல்லது இரும்பு பொருட்களை கையில் கொடுப்பார்கள். இப்படி கொடுப்பதினால் அவர்களுக்கு காயம் ஏற்படும். அதனால் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்.
குறிப்பு:
வலிப்பு இயற்கையாகவே 5 அல்லது 10 நிமிடத்தில் சரியாகி விடும். அதற்கு மேல் வலிப்பு நிற்கவில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். வலிப்பு நின்றுவிட்டதே என்று சாதாரணமாக விட்டு விடாதீர்கள். மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளை பெறுவது அவசியமானது.
இதையும் படியுங்கள் ⇒ வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |