International Mother Language Day in Tamil | உலக தாய்மொழி தினம்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஒவ்வொரு நாட்டிற்கும் தாய் மொழி என்று ஒன்று இருக்கும். இவுலகை சுற்றி பயணிப்பதற்காக மேலும் சில மொழிகளை கற்று வைத்து கொள்வார்கள். மொழி என்பது நாம் ஒருவருக்கு சொல்ல நினைக்கும் விஷயங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு, உரையாடுவதற்கு பயன்படுவது மொழியாகும். அந்த வகையில் இந்த உலகில் பேசுவதற்கு நிறைய மொழிகள் உள்ளன. இந்த மொழியை கொண்டாடுவதற்கென ஒரு தினம் உள்ளது. அதுதான் உலக தாயமொழி தினம்.. சரி இந்த பதிவில் உலக தாய்மொழி நாள் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உலக தாய்மொழி தினம் உலகம் முழுவதும் எந்த ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது? போன்ற தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்த்த விஷயங்களை நாம் படித்து தெரிந்து கொள்வதன் மூலம் போட்டி தேர்வுகளில் கலந்துக் கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக தாய்மொழி நாள் எப்போது?
விடை: பிப்ரவரி 21
உலக தாய்மொழி தினம் உலகம் முழுவதும் எந்த ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது?
விடை: இந்த சர்வதேச தாய்மொழி தினம் 1952-ஆண்டு பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி “பன்னாட்டுத் தாய்மொழி நாள்” ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.
தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.
நன்றி வணக்கம்..!
உலக நாடுகள் பட்டியல் |
முதல் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |