தமிழ்நாட்டின் தலைநகரம் எது? | Which is The Capital of Tamil Nadu

Which is Capital of Tamil Nadu

தமிழ்நாட்டின் தலைநகரம் | Tamilnattin Thalainagaram Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்நாட்டின் தலைநகரம் எது என்று பார்க்கலாம். இது போன்ற பொது அறிவு சார்ந்த கேள்விகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க தமிழ்நாட்டின் தலைநகரம் எது என்று தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

விடை: சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகும்.

Tamilnattin Thalainagaram:

 • தமிழ்நாடு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை உள்ளது. முதலில் இது மெட்ராஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.
 • தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாகவும் உள்ளது.
 • தமிழ்நாட்டில் கல்வி, பொருளாதாரம், பண்பாடு, மொழி, இலக்கியம், கட்டடக்கலை, சிற்பக்கலை என அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையாகவும் உள்ளது.
 • 89% சதவீதம் மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரம் ஏன் பெயர் மாற்றப்பட்டது?

 • மதராஸபட்டினம் என்று அழைக்கப்பட்ட போது இதன் தலைநகரமாக காஞ்சிபுரம் இருந்தது. பின்னர் இந்த மதராஸபட்டினத்தை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கி புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். பிரிட்டிஷ் மக்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இங்கு குடியேற ஆரம்பித்தனர்.
 • அதற்கு பிறகு மதராஸபட்டினத்தை சுற்றி இருந்த பல கிராமங்களை இணைத்து நவீன சென்னை நகரம் உருவானது. மதராசபட்டினம் மற்றும் சென்னைப்பட்டினம் தான் மெட்ராஸ் மற்றும் சென்னை என்ற பெயர் உருவாவதற்கு காரணமாக இருந்தது.
 • கிழக்கிந்திய கம்பெனி குடி புகுவதற்காக செலக்ட் செய்த இடத்தில் மதராசபட்டினம் மற்றும் சென்னைப்பட்டினம் என்று இரண்டு கிராமம் இருந்து வந்தது. இந்த இரண்டு கிராமங்களையும் இணைத்து உருவான இந்த நிலத்தை தான் நாம் இப்போது சென்னை என்று அழைக்கிறோம்.
 • மதராஸ் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற பேச்சுவழக்கு ஏற்பட்டதால், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களால் 1996-ம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது?

 • தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகவும் பழமையான மாநகராட்சி என்றால் அது சென்னை பெருநகர மாநகராட்சி தான்.

Tamilnattin Thalainagaram – தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் எது?

 • தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.

மாநகராட்சிகள்:

 • தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளது.
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்
சென்னை திண்டுக்கல்
கோயம்புத்தூர்நாகர்கோயில்
திருச்சிராப்பள்ளிஓசூர்
மதுரைஆவடி
சேலம்கும்பகோணம்
திருநெல்வேலிகாஞ்சிபுரம்
திருப்பூர்தாம்பரம்
ஈரோடுகரூர்
வேலூர்கடலூர்
தூத்துக்குடிசிவகாசி
தஞ்சாவூர் 

 

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil