வான்கோழியால் வெட்கபட முடியுமா..?

Advertisement

வான்கோழி பற்றிய தகவல்கள்

கோழிகளில் நிறைய கோழிகள் உள்ளது. நாம் இப்போது கோழிகள் எத்தனை என்பது பற்றி பார்க்க போவதில்லை..! இன்று வான்கோழியால் வெட்கப்பட முடியுமா..? என்பதையும் வான்கோழி பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வான்கோழியால் வெட்கபட முடியுமா?

 Information about turkey in tamil

 வான்கோழியால் வெட்க பட முடியும் . மேலும் இன்று வான்கோழி பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம்..!

நாட்டுக்கோழிகள் போலவே வான்கோழியிலும் நிறைய வகைகள் உள்ளது.  ஆனால் இந்தியாவில் அதிகளவு வெள்ளை வான்கோழி, கருப்பு வான்கோழி மட்டுமே வாழ்கிறது.

அதிலும் தமிழ் நாட்டில் அகன்ற மார்புடைய கருப்பு வான்கோழி தான் உள்ளது. அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பிலிருந்து வெள்ளை இனம் அதிகமாக காணப்படுகிறது.

வான்கோழிகள் அதிகமாக பச்சை நிற தாவரங்களை மிகவும் விரும்பி சாப்பிடும்.

வான்கோழி ஆசிய நாட்டை சேர்ந்தது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த வான்கோழிகள் வடமெரிக்காவில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉 பசு மாட்டின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?

சராசரியாக வளர்ந்து வரும் வான்கோழி முதல் 10 கிலோ வரை எடை இருக்கும். ஒரு வான்கோழி 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.

வான்கோழியால் பறக்க முடியாது என்பார்கள். ஆனால் காட்டு வான்கோழிகள் குறுகிய தூரத்திற்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு பறக்கும். ஆனால் வீட்டில் வளர்க்க கூடிய வான்கோழிகள் பறக்காது. ஏனென்றால் இது காட்டு வான்கோழிகளை விட 2 மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கும்.

வான்கோழிகள் முட்டை இடும் போது 20 நாட்களுக்குள் 10 லிருந்து 12 முட்டைகளை இடும். 25 நாட்கள் அடைகாத்து குஞ்சிப்பொறிக்கும்.

வான்கோழிகள் பெரும்பாலான நேரத்தை தரையில் தான் செலவிடுகிறது. ஆனால் தூங்கும் போது மரத்தில் ஏறி தூங்கும்.

வான்கோழிகளுக்கு மனிதர்களை விட 3 மடங்கு அதிக கண்பார்வை உடையது.  வான்கோழிகளுக்கு நிறத்தை பிரித்து அறிந்துகொள்ள முடியும்.

வான்கோழிகள் 20 –க்கும் மேற்பட்ட குரல்களை வெளிப்படுத்தும் என்று அறியபட்டுள்ளது.

வான்கோழியின் சத்தம் 1.1/2 கிலோ மீட்டர் தூரத்தில் கேட்குமாம். வான்கோழியின் தலையில் உள்ள இறக்கைகள் நிறம் மாறும் திறன் கொண்டது.

ஆண் வான்கோழி உற்சாகமாக இருக்கும் நேரத்தில் தலை நீல நிறத்தில் இருக்கும். வான்கோழி சண்டைக்கு தயாராகும் போது அது சிவப்பு நிறத்தில் மாறும். வான்கோழிகளுக்கு 6000 இறகுகள் இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉  உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..? 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement