உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..?

Advertisement

மகிழ்ச்சி

மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்பம் மற்றும் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கையாக அமைந்து இருக்கிறது. அதிலும் பார்த்தால் இந்த இன்பம் மற்றும் துன்பம் என்பது எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வருவதில்லை. அப்படி ஒரு செயல் இது வரையிலும் சாத்தியமானதாகவும் இல்லை. ஆனால் உலகின் மகிழ்ச்சியான நாடு என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் யோசிக்காமல் இது எப்படி சாத்தியம் ஆகும். உலகின் மகிழ்ச்சியான நாடா இது புதுசாக இருக்கிறது என்று ஆனால் அதுவும் ஒரு உண்மை தான். மேலும் அந்த மகிழ்ச்சியான நாடு எது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ உலகில் மழை பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

உலகின் மகிழ்ச்சியான நாடு எது..?

உலகின் மகிழ்ச்சியான நாடு எது

மகிழ்ச்சி என்பது ஒரு மனிதனுடைய உணர்ச்சிகரமான செயலாக இருக்கிறது. இத்தகைய மகிழ்ச்சி ஏதாவது ஒரு செயலில் வெற்றி பெற்றாலோ அல்லது மற்றவருடைய வெற்றியை பார்த்தோ தானாக உணர்ச்சிவசமாக வருகிறது.

இப்படி இருக்கும் போது ஒரு நாடு மட்டும் எப்படி மகிழ்ச்சிகரமான நாடக இருக்க முடியும் என்பது நிறைய பேரின் சந்தேகமாக இருக்கிறது. ஆம் நீங்கள் சந்தேகப்படுவது போல மகிழ்ச்சிகரமான நாடு என்று ஒரு உள்ளது. மகிழ்ச்சிகரமான நாடு எது என்றால்..?

அது பின்லாந்து நாடு தான். தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து இருக்கிறது. மகிழ்ச்சிரமான நாடு என்பதை ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வைத்து கணக்கிடப்படுவதாகும்.

இத்தகைய பின்லாந்தில் உள்ள குழந்தைகள் 7 வயதில் இருந்து தான் பள்ளிக்கு செல்லவே ஆரம்பிக்கின்றனர். அவர்கள் 7 வயதில் பள்ளிக்கு சென்றாலும் கூட அவர்கள் பாதி நாட்கள் தான் பள்ளிக்கு செல்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவர்கள் ஒரு நாளில் குறைவான நேரம் மட்டுமே படிக்கிறார்கள் மற்ற நேரங்களில் இதர விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

பின்லாந்து உள்ள பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஓய்வு அறை உள்ளது. வகுப்பறையில் ஏதாவது உடல்நிலை சரியில்ல என்றாலோ அல்லது படிக்க விருப்பம் இல்லை என்றாலும் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்துக்கொள்ளும் அனுமதி உள்ளது.

இதில் முக்கியமானது என்றவென்றால் பின்லாந்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் கூட கிடையாது. அதுமட்டும் இல்லாமல் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு 13 வயது வரை தரவரிசை அட்டை என்பதே கிடையாது மற்றும் டியூசன் என்பதும் கிடையாது.

அனைவரும் சமம் என கருதி அனைத்து குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.

பின்லாந்து உலகின் மகிழ்ச்சிகரமான நாடாக மட்டும் இல்லாமல் கல்வி தரத்திலும் தனித்து சிறந்து விளங்குகிறது.

மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement