அறிவு சார்ந்த கேள்விகள் | Brain Test Questions in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதவில் பொது அறிவு சார்ந்த கேள்விகளை படித்தறியலாம். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்கள் கண்டிப்பாக பொது அறிவு சார்ந்த கேள்விகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நாம் இந்த பதிவில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக சில அறிவார்ந்த கேள்விகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Intelligent Questions in Tamil:
- ஒரு கட்டிடத்தின் சுவரைக் கட்ட எட்டு பேருக்கு பத்து மணி நேரம் தேவைப்பட்டால், இதையே நான்கு பேர் கட்டினால் எவ்வளவு நேரம் தேவைப்படும்?
விடை: நேரம் தேவையில்லை. ஏற்கனவே கட்டியாகிவிட்டதே.
2. துணிச்சலுக்காக எந்த விலங்குக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
விடை: கண்ணிவெடிகளின் கம்போடியாவிலிருந்து அகற்ற உதவும் மாகவா என்ற எலி, துணிச்சல் விலங்கு என்ற விருதை பெற்ற முதல் விலங்கு ஆகும். இந்த எலி கம்போடியாவில் இதுவரை 39 கண்ணிவெடிகள் மற்றும் 28 வெடிபொருட்களை கண்டுபிடித்திருக்கிறது.
3. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?
விடை: வேளாண்மை
4. ஈராக் நாட்டின் தலைநகரம்
விடை: பாக்தாக்
5. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
விடை: ஆந்திரப்பிரதேசம்
Brain Test Questions in Tamil:
6. கி.பி 705 முதல் இன்னும் செயல்பட்டு வரும் பழமையான ஹோட்டல் எது?
விடை: ஜப்பானின் யமானஷியில் உள்ள Nishiyama Onsen Keiunkan உலகின் பழமையான ஹோட்டல் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. இந்த ஹோட்டல் Akaishi Mountain அருகே அமைந்துள்ளது மற்றும் இது 705 ஏ.டி.யில் Fujiwara Mahito நிறுவப்பட்டதிலிருந்து செயல்பட்டு வருகிறது. அப்போதிருந்து இது 1,3௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தின் சுமார் 52 தலைமுறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
7. Facebook நீல நிறத்தில் இருப்பது ஏன்?
விடை: Facebook நிறுவனர் Mark Zuckerburg சிவப்பு – பச்சை நிறக்குருடு உள்ளது, எனவே நீல நிறமே அவர் சிறப்பாக காணக்கூடிய ஒரே நிறம்.
8. வேகமாக செல்லும் கார் அல்லது பைக்கை நாய்கள் ஏன் துரத்துகின்றன?
விடை: நாய்கள் பைக் மற்றும் கார் டயரில் சிறுநீர் கழிக்கின்றன. இந்த கார் அல்லது பைக் சாலையில் சென்றால், மற்ற பகுதிகளின் நாய்கள் அந்த வாசனையை உணர்ந்து, அது தங்கள் இடத்திற்கு சொந்தமில்லை என்பதை அறிந்து அதை துரத்தவும், குரைக்கவும் தொடங்குகின்றன, சில சமயங்களில் மற்ற பகுதியின் நாய் வாகனத்தில் இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வர்கள். அந்த இடத்திலிருந்து உடனடியாக வாகனத்தை அகற்றவும், தங்கள் பகுதியை பாதுகாக்கவும் அவர்கள் அவ்வாறு செய்கின்றன.
9. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
விடை: பொகரான்
10. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
விடை: A.P.J. அப்துல் கலாம்
Intelligent Questions in Tamil:
11. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்
விடை: தாலமி
12. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
விடை: காந்தி நகர்
13. பேஸ்பால் மைதானம் எந்த வடிவமுடையது
விடை: டைமன்ட்
14. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
விடை: டேவிட் ஜசன் ஹோவர்
15. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி
விடை: உருது
Brain Test Questions in Tamil:
16. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: ஈ. வெ. இராமசாமி
17. மிக அடர்த்தியான கார்பன் எது?
விடை: கரி
18. உலகில் மிக பழமையான வேதம் எது?
விடை: ரிக்வேதம்
19. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்
விடை: தேவநேயப் பாவாணர்
20. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்
விடை: சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு வினா விடைகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |