கணிதம் பொது அறிவு வினா விடை | Maths Gk Questions in Tamil

Maths Gk Questions in Tamil

கணிதம் பொது அறிவு வினா விடைகள் | Math General Knowledge Questions With Answers in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் கணிதம் சார்ந்த பொது அறிவு வினா விடைகளை பார்க்கலாம். நமது யோசிக்கும் திறனை அதிகரிப்பதற்கு கணிதம் சம்மந்தமான வினாக்களை படித்து அதற்கான விடையை கண்டுப்பிடிப்பது மிகவும் நல்லது. கணித பாடம் பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதை புரிந்து படித்தால் எளிமையான பாடமாக இருக்கும். சரி வாங்க கணிதம் சார்ந்த பொது அறிவு வினாக்களையும் அதற்கான விடையையும் பார்க்கலாம்.

கணிதம் பொது அறிவு:

  1. ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்?

விடை: மடங்குகள்

2. 7.5, 3.2, 20.5 மற்றும் x-ன் சராசரி 10 எனில் x-ன் மதிப்பு என்ன?

விடை: 8.8

3. கணிதவியலின் தந்தை யார்?

விடை: ஆர்க்கிமிடிஸ்

4. ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் ________________ எனப்படும்?

விடை: சரிவகம்

5. கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை ஆவார்?

விடை: யூக்னிட்

கணிதம் பொது அறிவு வினா விடைகள்:

6. ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?

விடை: 440 மீட்டர்

7. GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது?

விடை: கிரேக்கம்

8. ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கை விட 15 குறைவு எனில் அந்த எண்?

விடை: 50

9. ஒரு டஜன் புத்தகங்களின் விலை Rs.1,020 எனில் Rs.765-க்கு எத்தணை புத்தகங்களை வாங்கலாம்.

விடை: ஒன்பது புத்தகங்கள்

10. 3.40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?

 விடை: 130°

Maths Gk Questions in Tamil:

11. அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல்?

விடை: வகுத்தல்

12. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே _____________ எனப்படும்?

விடை: காரணிகள்

13. PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு?

விடை: 50

14. திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை?

விடை: வெக்டர் அளவைகள்

15. புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து ___________________ எனப்படுகிறது?

விடை: வடிவியல்

கணிதம் பொது அறிவு வினா விடை:

16. ———வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஆகும்?

விடை: முப்பரிமாண

17. “மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற தள்ளுபடி விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி சதவீதம்?

விடை: 33.33%

18. ஒரு நூற்றாண்டில் எத்தனை மாதங்கள் உள்ளன

விடை: 1200

19. அவோகாட்ரோ எண் எனப்படுவது?

விடை: 6.023 X 10 23

20. ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின் சதவீதம்?

விடை: 85

Maths Gk Questions in Tamil:

21. ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள் 72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்?

விடை: 51.4

22. வடிவங்கள் என்பது ________________ உருவங்கள் ஆகும்?

விடை: சமதள

23. மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை ________________ என்கிறோம்?

விடை: முக்கோணம்

24. முதல் 20 இயல் எண்களின் வீச்சு?

விடை: 19

25. பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு _______________ எனப்படும்?

விடை: முழு எண்கள்

26. 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை?

விடை: 25

Maths Gk Questions in Tamil

27. ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையை விட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது?

விடை: 9 வயது

28. இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன?

விடை: 8

29. 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் 1 மணியில் 10 கி.மீ மணி என்றும், மீதமுள்ள 2 மணியில் 25 கி.மீ/மணி என்றும் செல்கிறது எனில் வண்டியின் சராசரி வேகம்

விடை:  20 கி.மீ/மணி

30. ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை ___________ எனக் குறிப்பிடுகிறோம்?

விடை: 24 மணி

அறிவியல் பொது அறிவு வினா விடைகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil