தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது? | Tamil Nattin Elumichai Nagaram

Tamil Nattin Elumichai Nagaram

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் 

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது என்று தெரிந்துகொள்ளலாம். படிக்கும் இளம் வயதில் இருந்தே நம்முடைய பொது அறிவு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் நம் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் ஆரஞ்சு நகரம் எது?

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது?:

விடை: புளியங்குடி 

புளியங்குடி நகரம் பற்றிய சிறு தொகுப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சி தான் தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரமான புளியங்குடி. புளியங்குடி நகராட்சியில் தற்போதைய மக்கள் தொகை எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

புளியங்குடி என பெயர் வர காரணம்:

அந்த நகரம் இன்று வளர்ந்து பல தரப்பட்ட வியாபாரம், கடைகள் எனப் பெருகியிருந்தாலும் அதற்கு ஆதாரமாக இருப்பது எலுமிச்சை வியாபாரமே ஆகும். இதனால் தான் புளியங்குடி நகராட்சிக்கு எலுமிச்சை நகரம் என்று அங்குள்ள மக்களால் பெயர் வழங்கப்பட்டது.

ஆனால் ஒரே ஒரு விவசாயப் பொருளை மட்டுமே வைத்து அந்தப் பகுதி பிரபலமாகி, அதன் பெயரிலேயே நகரம் அறியப்படுவது என்பது அநேகமாக தமிழ்நாட்டில் புளியன் குடி ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமாக விளங்கி வருவது எலுமிச்சையே ஆகும்.

அந்தப் பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் புளியன்குடியில் செயல்பட்டு வரும் எலுமிச்சை சந்தையாகும். தற்போது இருபத்தி ஏழு வியாபாரிகள் அந்தச் சந்தையில் தொழில் செய்து வருகின்றனர். விவசாயிகள் பகல் பன்னிரெண்டு மணிக்குள் தங்களின் தோட்டங்களிலிருந்து உற்பத்தியைக் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்கின்றனர்.

இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

 

மதியத்துக்கு மேல் லாரிகள் மூலம் எலுமிச்சை வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, சேலம், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்படுகிறது.

எலுமிச்சை வியாபாரம் மூலமாக அந்தப் பகுதி சார்ந்த விவசாயிகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த புளியன்குடி நகரமும் அதன் சுற்றுப்பகுதிகளும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil