தமிழ்நாடு பற்றிய பொது அறிவு வினா விடை..!

Tamilnadu GK in Tamil

Tamilnadu GK in Tamil

பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் தமிழ் நாடு பற்றிய பொது அறிவு வினா விடைகளை பற்றி படித்து தெரிந்துகொள்வோம். பொது அறிவு சார்ந்தவிஷயங்களை நாம் தெரிந்துகொள்ளும் பொது நாம் ஏதாவது போட்டி தேர்ர்வுகளுக்கு தயாராகும் பொது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தமிழ்நாடு (Tamilnadu GK in Tamil) பற்றிய பொது அறிவு வினா விடைகளை படித்து தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு பற்றிய பொது அறிவு வினா விடை..! – Tamilnadu GK in Tamil..!

1 தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது?

விடை: தொட்டபெட்டா

2 தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்?

விடை: s. விஜயலக்ஷ்மி

3 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: சிவாஜி கணேசன்

4 தமிழ் நாட்டின் முதல் பெண் IPS யார்?

விடை: திலகவதி

5 சோலையார் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

விடை: சாலக்குடி ஆறு

6 தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

விடை: முத்துலெட்சுமி ரெட்டி

7 கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது?

விடை: ஈரோடு

8 ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: அகிலன்

9 தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்?

விடை: மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

10 நேபால் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: சார்.சி.வி ராமன்

11 தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது?

விடை: நாமக்கல்

12 தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது?

விடை: காவிரி

13 கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: திருநெல்வேலி

14 தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது?

விடை: ராயபுரம், சென்னை

15 தெற்கின் கைலாஷ் என்பது?

விடை: வெள்ளையங்கிரி மலை

16 தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது?

விடை: ஜவ்வாது மலை

17 தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது?

விடை: மேட்டூர் அணை

18 உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: விஸ்வநாதன் ஆனந்த்

19 தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம்?

விடை: 17 சதவீதம்

20 தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் எது?

விடை: சுதேச மித்திரன்

21 தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சென்னை

22 தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சிவகாசி

23 காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: கோவை

24 தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: திருப்பூர்

25 தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?

விடை: ராமநாதபுரம்

26 தமிநாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சேலம்

27 கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: தஞ்சாவூர்

28 நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

29 தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

30 இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவது?

விடை: சென்னை

பொது அறிவு வினா விடைகள்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil