தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகள்

Thomas Alva Edison Inventions in Tamil

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகள் | Thomas Alva Edison Inventions in Tamil

அறிவியல் உலகில் அதிக கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்றால் தாமஸ் ஆல்வா எடிசன் தான். எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1300 கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அவற்றில் 1093 கண்டுபிடிப்புகளுக்கு பதிவுரிமைகளை பெற்றவர் என்றால் வியக்கத்தக்க விஷயமாக இருக்கிறது அல்லவா. தாமஸ் ஆல்வா எடிசன் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி 1847-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒஹியோ (Ohio) மாநிலம், மிலான் (Milan) என்னும் நகரத்தில் பிறத்தவரி. சரி இந்த பதிவில் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் சிலவற்றை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

Thomas Alva Edison Kandupidipugal in Tamil:

தாமஸ் எடிசன் அவர்கள் கண்டுபிடித்த கருவியல் ஏராளம் என்றாலும் கூட இன்று நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்திற்கும் அவர்தான் தந்தை.

ஒலியைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்க செய்யும் போனோகிராப் என்கிற ஒலி வரைவியை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் தான்.

அதேபோல் 1887 ஆண்டுகள் வரை அமிலங்களை ஊற்றித்தான் விளக்கெரித்துக் கொண்டிருந்தார்கள். எடிசன் வெப்பத்தை வெளிவிடுகிற மின் விளக்கைக் (பல்பு) கண்டுபிடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய மின்சக்தி சேமிப்புக் கலங்களை கண்டுபிடித்த பெருமையும் அவருக்கு உண்டு.

எடிசன் அவர்கள் மின்சார விநியோக மையம் ஒன்றை நியூயார்க் நகரில் ஏற்படுத்தி நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகம் செய்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் முதல் முதலில் நகரும் படத்தை (திரைப்படத்தை) உருவாக்கும் கினெட்டாஸ்கோப் கருவியை கண்டுபிடித்தவர்.

அதேபோல் கிராமபோன், நவீன தட்டச்சு இயந்திரம், டிக்டேட்டிங் மெஷின், டெலிபோன் ட்ரான்ஸ் மிட்டர் போன்றவை அவருடைய கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேலும் எடிசன் அவர்கள் பங்குச் சந்தை டெலிகிராப் ஏஜன்சியில் வேலை பார்த்தபோது தந்தி பதிவு கருவி (Ticker System)யைத் தயாரித்தார். பங்குச் சந்தையின் தலைவர் அக்கருவியை 40,000 டாலர் விலை கொடுத்து வாங்கிக் கொன்றாராம். அந்த நாளில் 40 ஆயிரம் டாலர் என்பது மிகப்பெரிய தொகையாகும்.

திரைப்படத்திற்கு தயாரிப்புக்குத் தேவையான காமிரா, புரொஜக்டர் கருவிகளை கண்டுபிடித்தவர் இது போன்று தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களது கண்டுபிடிப்புகள் ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றன. எனவே கண்டுபிடுப்புகளின் தந்தை என்ற பெருமையும் எடிசன் அவர்களையே சேரும்.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil