Which Creature Does Not Have Lungs in Tamil
இன்றைய பதிவில் மிகவும் சுவாரசியமான ஒரு தகவலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்ன சுவாரசியமான தகவல் என்றால் நாம் அனைவருமே மிகவும் ஆரோக்கியமாக உயிர்வாழ வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது நமது சுவாசக்காற்று தான். அப்படி நாம் உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் சுவாசத்தை நமக்கு சுத்திகரித்து அளிப்பது நமது நுரையீரல் தான். இப்படிப்பட்ட சிறப்புடைய நுரையீரலே இல்லாத ஒரு உயிரினம் இந்த உலகில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா..?
ஆம் நண்பர்களே நுரையீரலே இல்லாத ஒரு உயிரினம் இந்த உலகில் உள்ளது. அது என்ன உயிரினம் என்பதை பற்றியும். அதனை பற்றிய முழுவிவரங்களையும் இன்றைய பதிவில் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
நுரையீரல் இல்லாத உயிரினம் எது..?
என்ன சொல்லுறீங்க நுரையீரல் இல்லாமல் ஒரு உயிரினம் உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது புரிகின்றது. ஆனால் அது தான் உண்மை. ஆம் நண்பர்களே நுரையீரல் இல்லாமல் ஒரு உயிரினம் உள்ளது. அதனை பற்றி இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..
நுரையீரல் இல்லாத உயிரினம் எது..?
விடை: எறும்பு
எறும்பு பற்றிய தகவல்:
பொதுவாக எறும்புகள் மனிதர்களை விட மிகவும் பலம் கொண்டுள்ளது. அதாவது எறும்புகள் தங்களது எடை விட 50 மடங்கு அதிகம் எடை உள்ள பொருட்களை கூட சுமந்து செல்லும் திறனை கொண்டிருக்கும். இதிலும் ஆசிய நெசவாளர் எறும்பு ( Asian Weaver Ant ) தனது எடையை விட 100 மடங்கு அதிகம் எடை உள்ள பொருட்களை கூட சுமந்து செல்லும் திறனை கொண்டுள்ளதாம்.
எறும்புகளின் உடலில் சுவாச அமைப்பு கிடையாது அதற்க்கு பதிலாக இதன் உடலை சுற்றி ஆக்சிஜனைக் கொண்டு செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளது. அதேபோல் எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. அதனால் எறும்புகளால் கேட்க முடியாது என்று அர்த்தம் இல்லை. எறும்புகள் நிலத்தின் அதிர்வை கொண்டே பொருட்களை அறிந்து கொள்கின்றன.
இந்த உலகில் எவ்வளவு எறும்புகள் உள்ளது என்று இன்றளவும் அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் 1 மனிதருக்கு 1 மில்லியன் அளவு எறும்புகள் இருக்கும் என்று பல ஆராச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
சில எறும்புகளுக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு ஆண் எறும்பு தேவைப்படுவதில்லை. அவை குளோனிங் வழிமுறையில் இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன. அதேபோல் எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளது. அதில் ஒரு வயிற்றில் தனக்கான உணவினையும், மற்றொன்றில் மற்ற எறும்புகளுக்கான உணவுகளையும் சேமித்து வைத்து கொள்ளுமாம்.
பறக்கும் போது தூங்கும் பறவை எது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |