Which Part Of Human Body Does Not Sweat in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடலில் வியர்வை என்பது வரும். அதாவது உடலில் வியர்க்காத இடம் என்று எதுவுமே கிடையாது. இப்படி தான் நாம் அனைவருமே நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம் உடலில் வியர்க்காத பகுதி என்று ஓன்று உள்ளது. அது எதுவென்று உங்களுக்கு தெரியுமா..?
தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை பற்றி தான் இன்றைய பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். அதாவது, மனித உடலில் வியர்க்காத பகுதி எது என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். எனவே இப்பதிவை முழுமையாக படித்து நம் உடலில் வியர்க்காத பகுதி எது என்று தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது தெரியுமா
மனித உடலில் வியர்க்காத பகுதி எது..?
பொதுவாக மனித உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. அதுபோல மனிதனின் உடலில் வியர்வை சுரப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வெயில் காலத்தில் அனைவருக்குமே உடலில் வியர்வை சுரக்கும். ஆனால் நம்மில் சில பேருக்கு உள்ளங்கை மற்றும் கால்களில் வியர்வை சுரக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
பொதுவாக இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. அதனால் அனைவருக்குமே வியர்வை கொட்டோகொட்டென்று கொட்டி விடும். ஆனால் இந்த வெப்பத்தில் நம் உடலில் ஒரு பகுதியில் மட்டும் வியர்க்காதாம். சரி நம் உடலில் வியர்க்காத பகுதி என்று ஒன்று உள்ளது. அது எந்த பகுதி என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது உங்களுக்கு தெரியுமா..
அதாவது மனிதனின் உடலில் வியர்க்காத பகுதி என்று சொல்வது உதட்டை தான். ஆமாம் நண்பர்களே மனித உடலில் உதட்டில் மட்டும் வியர்ப்பதில்லை. காரணம் நம் உதடுகளில் வியர்வை சுரப்பிகளே இல்லை.
உதடுகளில் வியர்வை சுரப்பிகள் இல்லாததால், தான் உதடுகளில் வியர்ப்பதில்லை. மேலும் வியர்வை சுரப்பிகள் இல்லாததால் தான் உதடு விரைவாகவே வறண்டு விடுகிறது.
மேலும் நம் உடலில் எக்ரைன் மற்றும் அபோக்ரைன் என்று 2 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
இந்த எக்ரைன் என்ற வியர்வை சுரப்பியானது, நீர்ச்சத்து நிறைந்த பொருளை வெளியேற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதுபோல அபோக்ரைன் என்ற வியர்வை சுரப்பியானது அக்குள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த சுரப்பியானது துர்நாற்றம் மற்றும் பிசுபிசுப்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |