மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது தெரியுமா..?

Which Organ Grows Till Death

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது என்று உங்களுக்கு தெரியுமா..? பதில் தெரியாதவர்கள் மற்றும் பதிலை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது உங்களுக்கு தெரியுமா..?

Which Organ Grows Till Death In Human Body in Tamil:

பிறந்ததில் இருந்து ஒரு குழந்தை எப்படி வளர்கிறதோ அதேபோல நம் உடலில் இருக்கும் உறுப்புகளும் வளரும். இது நம் அனைவருக்குமே தெரியும். மனித உடலின் உயரம் ஒரு வயதிற்கு மேல் வளர்வதில்லை. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான்.

ஆனால் நாம் சாகும் வரை நம் உடலில் வளரக்கூடிய உறுப்புகள் 2 இருக்கிறது. அது என்ன உறுப்பு என்று சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது

 மனித உடலில் சாகும் வரை வளரக்கூடிய உறுப்பு காது மற்றும் மூக்கு தான். முடி மற்றும் நகங்கள் போன்றவற்றைத் தவிர நம் மரணத்திற்குப் பிறகு சிறிது காலத்திற்கு வளரக்கூடிய இரண்டு வெளிப்புற உடல் பாகங்கள் காதுகள் மற்றும் மூக்கு என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.  
மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..?

காரணம்:

நமக்கு வயதாகும் போது நம் உடலின் மற்ற பகுதிகள் சுருங்கும்.  ஆனால் ​​​​நமது மூக்கு, காது மடல்கள் மற்றும் காது தசைகள் பெரிதாகிக்கொண்டே இருக்கும். ஏனென்றால், அவை பெரும்பாலும் குருத்தெலும்பு செல்களால் ஆனவை. அதனால் தான் அவை நமக்கு வயதாகும் போது அதிகமாகப் பிரிக்கப்படுகின்றன. 

நமது காதுகள் மற்றும் மூக்கில் எலும்புகள் இல்லை. இது குருத்தெலும்பு அல்லது ‘கிரிஸ்டில்’ என்ற உள் ஆதரவுகளால்செயல்படுகிறது. இது எலும்பை விட இலகுவானது மற்றும் நெகிழ்வானது. இதனால் தான் மூக்கு மற்றும் காதுகளை நம்மால் வளைக்க முடிகிறது.

அதனால் தான் காதுகள் மற்றும் மூக்கு, மனித உடலில் வளருவதை நிறுத்தாத இரண்டு பாகங்கள் என்று கூறப்படுகிறது.

மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.?
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn