Which State Have No Railway Station in India
பொதுவாக நாம் அனைவரும் நிறைய இடங்களுக்கு சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோம். அதிலும் சிலர் வருடம் மற்றும் மாதந்தோறும் என அடிக்கடி சுற்றுலா செல்வார்கள். இவ்வாறு நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அதற்கு பஸ், கார், பைக் மற்றும் ரயில் என இதுபோன்ற பயணங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் என்ன தான் நிறைய வகையான பயணங்கள் இருந்தாலும் கூட நமக்கு ஏற்றதாக இருப்பது என்றால் அது ரயில் பயணம் தான். இந்த ரயில் பயணம் ஆனது நாம் குறைவான நேரத்தில் விரைவாக செல்வதற்கும், நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. அதனால் தான் பெரும்பாலான நபர்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லதா மாநிலம் ஒன்று இருக்கிறது. அது என்ன மாநிலம் என்றும், வேறு என்ன அதில் சிறப்புகள் இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் எது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய மற்றும் அதிக ஆர்வத்துடன் இருக்கக்கூடிய ஒரு பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். ரயில் பயணம் என்பது ஒரு இடத்திற்கு மிக வேகமாக குறைவான கட்டணத்துடன் செல்வதற்கு உகந்த ஒன்றாக இருக்கிறது.
ஆனால் இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் என்று ஒன்று உள்ளது. இது நாம் எல்லோரையும் வியக்கவைக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட சாத்தியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இந்தியாவில் ரயில் போக்குவரத்துக்கு இல்லாத மாநிலம் எது என்றால்..? சிக்கிம் தான்.
இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 29 மாநிலங்கள் காணப்பட்டாலும் கூட அதில் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் ரயில் போக்குவரத்து என்பதே கிடையாது.
கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா
சிக்கிமை பொறுத்தவரை ரயில் நெட்வொர்க்குடன் எந்த விதமான இணைப்பினையும் இணைக்கவில்லை. ஆனால் இந்த மாநிலத்தை மற்ற நகரங்கள் மற்றும் சாலைகளுடன் இணைக்கும் ஒரு இடம் என்றால் அது தேசிய நெடுஞ்சாலை-10 ஆகும்.
இவ்வாறு இருக்கையில் சிக்கிமிற்கு அருகில் நியூ ஜல்பைகுரி மற்றும் சிலிகுரி என்ற ரயில் நிலையங்கள் இடம் பெற்றிருக்கிறது.
சிக்கிமில் ரயில் நிலையம் அமைக்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருப்பது அந்நாட்டில் உள்ள உயரமான மலைகள் தான். இந்த காரணத்தினால் தான் சிக்கிமில் ரயில் நிலையம் என்ற ஒன்று அமைக்கப்படவில்லை.
மேலும்மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமை இணைக்கும் விதமாக சிவோக்-ரங்போ என்ற ரயில் பாதை கட்டப்பட்டு வருகிறது.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |