கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் தெரியுமா ?

Advertisement

கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? – Kalai Gnayiru Endru Alaikkapadupavar Yaar

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை பற்றி பதிவு செய்து வருகின்றோம். தினமும் ஒரு பொது அறிவு வினா விடைகளை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம். அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆக அரசு தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். சரி இன்றிய பதிவில் கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? என்பது குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? – Who is known as Kalai Gnayiru?

விடை: காலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

இதையும் கிளிக் செய்த்து படியுங்கள் 👇
நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

தேவநேயப் பாவாணர் பற்றிய சில தகவல்கள்:தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் அவர்கள் பிப்ரவரி 07, 1902-ஆம் ஞானமுத்து ஆசிரியருக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாவது குழந்தையாகவும் நான்காவது மகனாகவும் சங்கரன்கோவிலில் பிறந்தார்.

1906-இல் ஞானமுத்துவும் பரிபூரணமும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த தமக்கையான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார் தேவநேயர். இவர்களுக்கு யங் என்ற பிரித்தானிய அலுவலர் பொருளுதவி செய்தார்

இவருடைய இயற்பெயர் ஜி. தேவநேசன். தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி அறிஞர். தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் மற்றும் சொற்களின் வளர்ச்சிமாற்றம் குறித்த ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர். பல்வேறு இந்திய மொழிகளில் பயிற்சி கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்திற்கு பங்காற்றியவர். ‘தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) இவரால் உருவாக்கப்பட்டது. மொழிஞாயிறு என்னும் பட்டத்துடன் அறியப்படுகிறார். தமிழியம் என அறியப்படும் பண்பாட்டு இயக்கத்தின் முதல்வர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

விருதுகள்:

  • பாவாணர் 1971-ல் ‘செந்தமிழ் ஞாயிறு’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • 1980-ல் எம். ஜி. ஆர். இவருக்கு ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

மறைவு:

ஜனவரி 5,1981-ல் உடல் நலம் சரியில்லாது அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே ஜனவரி 15, 1981-ல் காலமானார்.

நினைவகங்கள்:

  • சென்னையில் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் செயல்படுகிறது
  • மதுரையில் பாவாணருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது

இதையும் கிளிக் செய்த்து படியுங்கள் 👇
பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?

நூல்கள்:

  • தேவநேயப் பாவாணர் -இரா. இளங்குமரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)(2000)
  • பாவாணர் நினைவலைகள் -தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி (2006)
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement