ஆப்பிள் வாங்குவது எப்படி.?
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆப்பிளை சாப்பிடுவார்கள். இந்த ஆப்பிளில் மிகுந்த சத்துக்கள் இருப்பதால் இதனை தேர்வு செய்கின்றனர். நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப ரக ரகமான ஆப்பிள்களும் மார்க்கெட்டில் கிடைக்கும். எனினும், தரமான ஆப்பிள்களை தான் நாம் வாங்குகிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனால் சிறந்த ஆப்பிள்களை பார்த்து வாங்குவது பலருக்கும் கஷ்டமாக இருக்கிறது. பெரும்பாலும், ஆப்பிள்கள் வெளியில் பார்ப்பதற்கு சிறந்த தோற்றம் கொண்டிருக்கும். ஆனால், வீட்டில் சென்று வெட்டி பார்த்தால் தான் அதன் உண்மையான தரம் வெளிப்படும். இதன் காரணமாக தான், ஒரு சிலர் தரமற்ற ஆப்பிளை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர். அதனால் தான் இந்த பதிவில் ஆப்பிளை தரமாக வாங்குவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கலப்படம் செய்யப்பட்ட ஆப்பிள்:
ஆப்பிளை வாங்கும் போது பளபளப்பாக இருந்தால் அவை நல்ல ஆப்பிள் என்று நினைத்து வாங்குகிறோம். ஆனால் இவை முற்றிலும் தவறானது. ஏனென்றால் பளபளப்பாக உள்ள ஆப்பிள் எல்லாமே கலப்படம் செய்யப்பட்டதாக இருக்கிறது. இவை பளபளப்பிற்காக தோலின் மேல் வேக்ஸ் தடவுகிறார்கள்.
இதனை நீங்கள் கடையிலே ஆப்பிளின் தோல் பகுதியில் கீறி பாருங்கள். அப்படி கீறும் போது வெள்ளையாக வந்தால் அவை கலப்படம் செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். அல்லது கத்தியை வைத்து தோல் பகுதியை கீறி பார்த்தாலும் அதில் வெள்ளையாக வரும். அப்படி வந்தாலும் அவை கலப்படம் செய்யப்பட்டது.
இதனை நீங்கள் சாப்பிட்டால் செரிமானம் ஆகுவதற்கு நேரம் எடுத்து கொள்ளும். மேலும் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆப்பிள் என்பதன் தமிழ் பெயர் இது தானா
ஆப்பிள் பார்த்து வாங்குவது எப்படி.?
நீங்கள் கடைக்கு சென்று பளபளன்னு உள்ள ஆப்பிளை வாங்க கூடாது. கலர் டல்லாக உள்ள ஆப்பிளை வாங்குவது தான் சிறந்தது. ஏனென்றால் அவை தான் கலப்படம் செய்யாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஆப்பிளாகும்.
அடுத்து ஆப்பிளின் அடிப்பகுதியில் சுருக்கம் அதிகமாக இருந்து பச்சை நிறமாக இருந்தால் அந்த ஆப்பிள் ஆனது ஒரு வாரத்திற்கு நன்றாக இருக்கும். அதுவே சுருக்கம் குறைவாக இருந்து சிவப்பாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தான் அந்த ஆப்பிள் நன்றாக இருக்கும்.
ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |