Paneer Poo Increasing Possitive Vibes Home In Tamil
ஒவ்வொரு பூக்கள் மற்றும் மரங்களுக்கும் சில நல்ல குணாதிசியங்கள் இருக்கின்றன. சில தாவரங்கள் நமக்கு மருத்துவத்திற்கு உதவுகின்றன. சிலவகை தாவரங்கள் பக்கத்தில் நாம் சென்றாலே நம் மனமே லேசாகி விடும். அதன் காரணம் நமக்கு தெரியாது. காரணம் அதிலிருக்கும் நேர்மறையான சக்தி தான் . நேர்மறையான அதிர்வலைகள் நமக்கு நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. இதன் மூலம் நம் மனம் அமைதியாகிறது. மனம் நன்றாக இருக்கும்போது உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அப்படி நேர்மறை ஆற்றல் கொண்ட தாவரங்களை வீட்டில் வளர்க்கலாமே ..! இந்த பதிவில் நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் பன்னீர் பூக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
பன்னீர் பூக்கள் உள்ள இடத்தில் நேர்மறை எண்ணங்களை தருகின்றன:
- பன்னீர் மரம் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவுக்குரிய தெய்வீகம் நிறைந்த மரமாக கருதப்படுகிறது. பன்னீர் பூக்கள் ஆண்டின் எல்லா பருவங்களிலும் பூக்கிறது. முக்கியமாக கோவில்களில் அதிகமாக இந்த பன்னீர் மரத்தை காணலாம். இந்த பன்னீர் மரத்தில் இருக்கும் பூக்கள் மாலையில் தான் மலர்கின்றன. அடுத்த நாள் காலையில் உதிர்ந்து விடுகின்றன.
- பன்னீர் மலர்கள் மனதிற்கு நேர்மறை எண்ணங்களை தருகின்றன. எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் அதனை நீக்குகின்றன.
- பன்னீர் மரத்தில் இருந்து கிடைக்கும் பன்னீர் பூக்கள் கோவில்களில் அர்ச்சனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த பன்னீர் பூ மரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறை எண்ணங்களை ஈர்க்க முடியும்.
பன்னீர் பூ மரத்தின் மருத்துவ குணங்கள்:
- இந்த பன்னீர் பூக்களில் இருந்து வலி நிவாரணத்திற்கு தைலம் தயாரிக்கிறார்கள். இந்த தைலம் மூட்டு எலும்பு, முதுகு, கை, கால் வலிகளை சரி செய்கிறது.
- இந்த பன்னீர் பூவில் சருமத்திற்காக எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது முகச்சுருக்கங்கள் மற்றும் சருமத்தின் கருமை நிறம் ஆகியவற்றை சரி செய்கிறது. சருமத்தில் ஏற்பட்ட தழும்புகளையும் மறைய செய்கிறது.
- ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் பிரச்சனை சரியாக இந்த பன்னீர் பூக்களை காயவைத்து அதனை சாம்பிராணி புகையாக நுகருகிறார்கள்.
- தலைமுடி கருமை சாயத்திற்காகவும் இந்த பன்னீர் மரத்தின் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் பன்னீர் பூக்கள் வாசத்திற்காக சேர்க்கப்படுகின்றன.
மருத்துவம் மற்றும் நேர்மறை ஆற்றலை தர கூடிய இந்த பன்னீர் பூ மரத்தை நீங்கள் வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்.
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்..!
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |