கிச்கிச் செய்வதால் சிரிப்பு ஏன் வருகிறது.?

Advertisement

ஏன் சிரிப்பு

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் மிகவும் சுவாரசியமான செய்தியை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம். சிரிப்பு என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். வாய் விட்டு  சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி கூட இருக்கிறது. மனது கஷ்டமாக இருக்கும் போது கொஞ்சம் சிரித்தால் மனதில் உள்ள கவலைகள் எல்லாம் நீங்கும். சிரிப்பு என்பது நகைசுவை பார்த்து சிரிப்பது இயற்கையானது. ஆனால் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் உடம்பில் கிச்கிச் செய்தால் ஏன் சிறப்பு வருகிறது என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்  மனிதனுக்கு பயம் வருவதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

கிச்கிச் செய்வதால் ஏன் சிரிப்பு வருகிறது.?

கிச்கிச்சை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். அவை Knimeses, Gargalesis என இரண்டாக பிரிக்கின்றனர். அதில் knismesis  என்பது உடலில் லேசாக தொடும் போது அச்சம் ஏற்படும். Gargalaesis என்பது அழுத்தி தொடும் போது நம்மாலே அறியாமல் கூச்சம் ஏற்படும் அதை தான் கிச்கிச் என்று அழைக்கிறோம். 

உங்களது உடம்பில் எல்லா இடத்திலேயும் தொட்டால் சிரிப்பு வருமா.? இல்லை சில இடங்களில் அதாவது இடுப்பு  பகுதியை தொடும் போது மட்டும் தான் சிரிப்பு ஏற்படும். நமது உடலில் அடிபட்டால் சரி செய்ய முடியாத ஒரு பகுதி இடுப்பு தான். இதனை பாதுகாப்பதற்காகவே கூச்சம் ஏற்படுகிறது. கூச்சம் ஏற்படும் பொழுது ஏன் சிரிப்பும் வருகிறது என்று யோசிக்கிறீர்களா.!

நமது மூளையை somatosensory cortes, anterior cingulate cortex என பிரிக்கின்றனர். somatosensory cortes என்பது தொடு உணர்வை ஏற்படுத்துகிறது. anterior cingulate cortex என்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இது இரண்டும் செயல்படுவதால் சிரிப்பு வருகிறது. இன்னொன்று சிரிப்பு வருவதற்கு நரம்புகள் தூண்டுதல் மூலமாக  சிரிப்பு ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ உலக சிரிப்பு தினம்

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 

 

Advertisement