என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?

Advertisement

எந்த படிப்புக்கு வேலை..!

இந்த காலத்தில் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது என்பது மிக பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. ஆகவே பலர் கிடைக்கும் வேலையை செய்கின்றன. பெருபாலான பெற்றோர்கள் தனது பிள்ளையின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்திடுவார்கள். தனது பிள்ளையை எந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்? எந்த கல்லூரியில் தனது பிள்ளையை சேர்க்க வேண்டும்? என்று படிப்பு சம்மந்தமாக ஆலோசனை கேட்பார்கள், அதேபோல் இஞ்சினியரிங்கில் என்ன படிப்பது?, மெடிக்கல்ல என்ன படிப்பது?, B.Com முடித்தால் வேலை கிடைக்குமா? என்று பல யோசனைகள் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு நிறைய யோசைனையும், குழப்பமும் இருக்கும். ஒரு மாணவன் நன்றாக படித்தாலும், சுமாராக படித்தாலும், சுத்தமாக படிப்பே வரவில்லை என்றாலும் அவனுடைய தகுதிக்கு ஏற்ற ஒரு வேலை இருக்கும். வாழ்க்கையில் முன்னேற ஒரு மனிதன் நன்றாக படித்திருந்தால் மட்டும் போதாது உங்கள் திறமைக்கேற்ற துறையை தேர்ந்தேடுத்து அவற்றில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும். சரி இந்த பதிவில் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?

என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?

இன்ஜினியரிங் படிப்பில் ஐ.டி., துறை:

இன்ஜினியரிங் படிப்பில் ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்தவர்களுக்கு எங்கும், எப்போதும் வேலை உள்ளது. மற்ற துறைகளில் எல்லாம் நூற்றுக்கணக்கானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்றால், ஐ.டி., துறையில் மட்டும் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். ஐ.டி. துறைக்கு எப்போதும் மதிப்பு குறையாது. ஐ.டி.யை தேர்வு செய்து படித்தால் நல்லது.

ஐ.டி துறை கிடைக்காத பட்சத்தில்:

இந்த ஐ.டி துறையில் கிடைக்காத பட்சத்தில் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம். அல்லது கம்யூனிகேஷன் துறையை தேர்ந்தெடுத்து படித்தால் நல்லது. இன்ஜினியரிங் படிப்பில் மற்ற துறைகளில் உங்களுக்கு மிகவும் ஆர்வம் இருந்தால், அவற்றை தேர்வு செய்யலாம் தப்பில்லை. பிளஸ் 2-வில் எது படித்தாலும் அத்துடன் கணிதப் பாடம் இருந்தால் நல்லது. அதுபோல் மருத்துவத் துறையிலும், அதிக மதிப்பெண் கிடைத்தால், அதை தேர்வு செய்யலாம்.

கால்நடை மருத்துவத் துறை:

கால்நடை மருத்துவத் துறை போன்ற பிற துறைகளைத் தேர்வு செய்யலாம். இப்போது புதிதாக வந்துள்ள, பார்மசி டாக்டர் என்ற படிப்பை தேர்வு செய்யலாம். மருத்துவத் துறையில் உள்ள துணை படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

மற்ற துறைகள்:

பேங்கிங், இன்சூரன்ஸ், பைனான்ஸ் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளை படித்தாலும் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. எந்த படிப்பை படித்தாலும் ஆங்கில அறிவு என்பது அனைத்து துறைகளிலும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்காலத்தில் எந்த துறையில் சாதிக்க விரும்புகிறீர்களோ, அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்து படிப்பது மிகவும் நன்று. அதிகம் சம்பாதிக்கலாம் என்பதற்காக உங்களுக்கு விருப்பம் இல்லாத படிப்பில் சேர்ந்து தோற்றுபோவதைக் காட்டிலும் உங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுத்துப் படித்து வெற்றி பெறுவது நல்லது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement