B.com Course Details in Tamil
நான் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டேன் அடுத்து நான் B.Com படிக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் நீ B.Com படிக்கவேண்டாம் அந்த படிப்பிற்கு அவ்வளவாக மதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் நீ B.Com படி அதற்கு நல்ல மதிப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.
இப்பொழுது நான் B.Com படிக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி உங்களின் மனதில் உள்ளதா. அந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் தான் இந்த பதிவில் B.Com படிப்பு பற்றிய முழுவிவரங்களையும் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
B.com Full Form in Tamil:
B.Com என்பது இளங்கலை வணிகவியல் என்றும், Bachelor of Commerce என்றும் கூறப்படுகிறது. B.Com என்பது 3 ஆண்டு படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பு ஆகும். மேலும் இது 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
B.Sc Maths படிக்க விரும்புபவரா நீங்கள் அப்போ இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
B.com Course படிக்க தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் வணிகவியல் பாடத்தை அதாவது கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வில் குறைந்தபட்ச சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிந்தாலும் இந்த படிப்பை படிக்க முடியும்.
- மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திற்கும் வேறுபாடுகின்றன.
B.com Course Details in Tamil:
நீங்கள் B.Com பட்டம் பெற்றவராக இருந்தால் உங்களுக்கு வணிகவியல் துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறலாம்.
ஆனால் நீங்கள் B.Com படித்துக் கொண்டிருக்கும் பொழுதே Coding Skills, Algorithm போன்றவை படிக்க வேண்டும். Coding Skills என்றால் C Program, C++, Python போன்ற கணினி தொழில்நுட்ப பிரிவுகளையும் படிக்க வேண்டும்.
ஏனென்றால் எதிர்காலத்தில் வணிகவியல் துறை பெரும்பாலும் கணினி பயன்பாட்டை கொண்டவையாக இருக்கும். Business Analytics, Financial Technology, Business Management போன்ற பலவற்றிருக்கும் கணினி அறிவு தேவைப்படும்.
எனவே நீங்கள் மேலே கூறியுள்ள கூடுதல் படிப்பை பயில்வது உங்களின் எதிர்காலத்திற்கு நன்மையை அளிக்கும்.
B.com Course Subject in Tamil:
- Financial Accounting
- Business Laws
- Economics
- Taxation
- Auditing
- Cost Accounting
- Finance
- Accounting
- Banking
- Insurance
இது போன்ற பாடங்கள் இந்த B.Com-ல் உள்ளது. இந்த பாடங்கள் கல்லூரிகளை பொறுத்து வேறுபடுகின்றன. அதுமட்டுமில்லாமல் இதனுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்கள் 2 ஆண்டு வரை படிக்க வேண்டும்.
பிசிஏ படிப்பு பற்றிய முழு விவரங்கள்
B.com Course பிரிவுகள்:
முன்பு எல்லாம் B.Com ஒரே ஒரு பட்டப்படிப்பாக இருந்தது. ஆனால், தற்போது B.Com படிப்பில்
- B.Com Information Technology
- B.Com Bank Management
- B.Com Computer Application
- B.Com ISM
- B.Com Capital Market
என பல படிப்புகள் உள்ளது.
B.com Course வேலைவாய்ப்புகள்:
- நீங்கள் (B.Com) வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவராக இருந்தால் அரசு மற்றும் தனியார் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் உண்டு.
- அதிலும் குறிப்பாக ஆடிட்டிங், தகவல் தொடர்பியல், பிபிஓ, கேபிஓ, வங்கித்துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் உங்களுக்கு வேலைவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
- இத்தகைய துறைகளில் அக்கவுண்ட்ஸ் மேனேஜர், ஆடிட்டர், ஃபைனான்ஸ் மேனஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், ஈவண்ட்மேனேஜர் போன்ற உயர்பதவிகளிலும் வகிக்க முடியும்.
- மேலும், இதில் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு சொந்தமாக தொழில் நிறுவனத்தையும் நீங்கள் தொடங்க முடியும்.
மேற்படிப்பு:
இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்ற பிறகு நீங்கள் மேற்படிப்பு படிக்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் நேரடியாக Masters of Commerce (M.Com) படிக்கலாம். இதனால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளும் உள்ளது.
வணிகவியல் துறையில் பல முதுநிலை படிப்புகள் உள்ளன. அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா
வணிகவியல் துறையில் உள்ள முதுநிலை படிப்புகள்:
- Master of Business Administration (MBA)
- Master of Social Work (MSW)
- Master of Computer Science (MCS)
- Maternal Heart Rate (MHR)
- Managed File Transfer (MFT)
- Mobile Internet Device (MID)
- Master of Medical Management for Physicians (MMM)
போன்ற பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.
மேலும் பலவிதமான கல்வி தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |