ஏழாம் வகுப்பு இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
ஏழாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் வினா விடை: வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி சார்ந்த பதிவில் ஏழாம் வகுப்பு பேச்சு மொழி எழுத்து மொழி வினா விடைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவு இணைய வழியில் கல்வி பயில்வோருக்கும், பொது தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். வாங்க ஏழாம் வகுப்பு பேச்சு மொழி எழுத்து மொழி கேள்வி பதில்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
ஏழாம் வகுப்பு பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- மொழியின் முதல் நிலை பேசுதல், ———– ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
விடை: கேட்டல்
2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
விடை: எழுத்து
3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
விடை: தெலுங்கு
4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
விடை: உலக
சரியா, தவறா எழுதுக – samacheer kalvi 7th tamil solutions term 1 chapter 1.3
1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
விடை: சரி
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
விடை: சரி
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
விடை: தவறு
4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
விடை: தவறு
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.
விடை: சரி
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள் |
ஏழாம் வகுப்பு தமிழ் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வினா விடை (Samacheer Kalvi 7th Std Tamil Book Back Answers)
ஊடகங்களை வகைப்படுத்துக:
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
விடை:
எழுத்துமொழி:
மின்னஞ்சல், செய்தித்தாள், நூல்கள்
பேச்சுமொழி:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்
ஏழாம் வகுப்பு பேச்சுமொழி எழுத்துமொழி வினாக்கள் (7th Std Tamil Book Answers 1st Term)
கோடிட்ட இடங்களை நிரப்புக:
- எழுதப்படுவதும், படிக்கப்படுவது மொழியின் ______________
விடை: இரண்டாம் நிலை
2. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிமே ______________ ஆகும்.
விடை: எழுத்து மொழி
3. வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ______________ ஆகும்.
விடை: பேச்சுமொழி
4. கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது ___________________ ஆகும்.
விடை: எழுத்து மொழி
5. பேசுவதும் கேட்பதும் மொழியின் ______________ ஆகும்.
விடை: முதல் நிலை
6. மாறுபாடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ______________ என்பர்.
விடை: வட்டார மொழி
ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |