எட்டாம் வகுப்பு இயல் 1 தமிழ் வரி வடிவ வளர்ச்சி வினா விடைகள் | Samacheer Kalvi 8th Tamil Book Solutions Chapter 1.3

Advertisement

தமிழ் வரி வடிவ வளர்ச்சி வினா விடைகள்

samacheer kalvi 8th tamil book solutions: வணக்கம் நண்பர்களே பள்ளி படிக்கும் மாணவர்களுடைய கல்வியானது இப்போது இணையதளம் வாயிலாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களுடைய நலன் கருதி பாடங்களை எளிமையாக படிக்க எங்களுடைய பொதுநலம் பதிவில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தில் இடம்பெற்றுள்ள கோடிட்ட இடம், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக, சரியா? தவறா போன்ற வினா விடைகளை பதிவு செய்து வருகிறோம். இந்த பதிவானது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுத்து வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்..

எட்டாம் வகுப்பு தமிழ்மொழி மரபு வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது?

A. ஓவியக்கலை
B. இசைக்கலை
C. அச்சுக்கலை
D. நுண்கலை

விடை: அச்சுக்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது?

A. கோட்டெழுத்து
B. வட்டெழுத்து
C. சித்திர எழுத்து
D. ஓவிய எழுத்து

விடை: வட்டெழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.

A. பாரதிதாசன்
B. தந்தை பெரியார்
C. வ.உ. சிதம்பரனார்
D. பெருஞ்சித்திரனார்

விடை: தந்தை பெரியார்


தமிழ் வரிவடிவ வளர்ச்சி வினா விடைகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________________ என அழைக்கப்பட்டன.

விடை: கண்ணெழுத்துக்கள்

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ________________

விடை: வீரமாமுனிவர்


சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள்
எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடை பருவம் 1

தமிழ் வரிவடிவ வளர்ச்சி – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. மொழியை நிலைபெறச் செய்ய ________________ உருவாக்கினான்

விடை: எழுத்துகளை

2. ‘ஸ’ எனும் ________________ காணப்படுகிறது.

விடை: வட எழுத்து

3. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கருங்கல் ________________, ________________ காணமுடிகிறது

விடை: சுவர்களிலும், செப்பேடுகளிலும்

4. வரி வடிவங்களை ________________, ________________ என இருவகைப்படுத்தலாம்.

விடை: வட்டெழுத்து, தமிழெழுத்து

5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ________________ என்பர்.

விடை: ஒலி எழுத்து நிலை

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement