எட்டாம் வகுப்பு தமிழ்மொழி மரபு வினா விடைகள் | 8th Tamil Book Back Questions and Answers Chapter 1.2

8th Tamil Book Back Questions and Answers Chapter 1.2

எட்டாம் வகுப்பு தமிழ் மொழி மரபு கேள்வி-பதில் | 8th Tamil Book Back One Mark Questions with Answers

வணக்கம் நண்பர்களே படிக்கும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் பாடத்திலுள்ள தமிழ் மொழி மரபு கேள்வி பதில்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். தமிழ் பாடம் என்றாலே மாணவர்கள் விரும்பி படிக்கக்கூடிய பாடமாக இருந்து வருகிறது. அனைத்து பாடங்களிலும் முதன்மை மொழி பாடமாக அமைந்துள்ளது தமிழ் மொழி பாடம். தமிழ் பாடத்தில் மிக எளிமையாகவும் மதிப்பெண்களை பெறலாம். பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வாளர்களுக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே எட்டாம் வகுப்பு தமிழ் மொழி மரபு வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள்

தமிழ் மொழி மரபு வினா விடை:

சொல்லும் பொருளும்:

  1. விசும்பு – வானம்
  2. மரபு – வழக்கம்
  3. மயக்கம் – கலவை
  4. திரிதல் – மாறுபடுதல்
  5. இருதிணை – உயர்திணை, அஃறிணை
  6. செய்யுள் – பாட்டு
  7. வழாஅமை – தவறாமை
  8. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  9. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

  1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

A. நிலத்தில்
B. விசும்பில்
C. மரத்தில்
D. நீரில்

விடை: விசும்பில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

A. மரபு
B. பொழுது
C. வரவு
D. தகவு

விடை: மரபு

3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

A. இரண்டு + திணை
B. இரு + திணை
C. இருவர் + திணை
D. இருந்து + திணை

விடை: இரண்டு + திணை

4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

A. ஐம் + பால்
B. ஐந்து + பால்
C. ஐம்பது + பால்
D. ஐ + பால்

விடை: ஐந்து + பால்


ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்

இளமை பெயர்களை பொருத்துக:

1. புலிபறழ்
2. சிங்கம்குருளை
3. யானைகன்று
4. பசுகன்று
5. கரடிகுட்டி

 


ஒலி மரபுகளை பொருத்துக:

1. புலிஉறுமும்
2. சிங்கம்முழங்கும்
3. யானைபிளிறும்
4. பசுகதறும்
5. கரடிகத்தும்

 


கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.

விடை: ஒழுக்கம்

2. மொழிக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.

விடை: மரபு

3. தொல்காப்பியத்தின் ஆசிரியர் ___________ .

விடை: தொல்காப்பியர்

4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ___________ ஆகும்.

விடை: தொல்காப்பியம்

5. ___________, ___________ உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்

விடை: செய்யுளுக்கும், மரபுக்கும்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com