சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986
இந்திய குடிமக்கள் ஆகிய நாம் நமது நாட்டில் உள்ள சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது நமது கடமை. அந்த சட்டங்கள் நமக்கு சரியான சமயத்தில் துணைபுரியும். அனைத்து விதமான செயல்களும் சட்டத்தினை பின்பற்றியே நடக்கின்றது. நமக்கு தேவையான சலுகைகள், நமது கடமைகளை நமக்கு சட்டம் தெளிவாக விளக்குகிறது. அந்த வகையில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 பற்றி தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் கண்டிப்பாக சுற்றுசூழலை பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு நம்மால் ஏற்படும் சாதக பாதகங்கள் நிறைய ஏற்படுகிறது அதனை சரியான வழியில் கொண்டுசெல்ல நமக்கு சட்டம் தேவைப்படுகிறது. அப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க உருவாக்கிய சட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகும். வாருங்கள் Environment Protection Act 1986 பற்றி தெரிந்துகொள்ளவோம்.
Environment Protection Act 1986:
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான சட்டமாகும். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மற்றும் அகற்றவும் பல்வேறு வழிமுறைகளை வழங்குகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்திய பாராளுமன்றம் இயற்றிய ஒரு சட்டம் ஆகும். போப்பால் நச்சுவாயு நிகழ்வுக்குப் பிறகு இச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு 253 ஆவது பிரிவின் கீழ் இயற்றப்பட்டு 19 நவம்பர் 1986 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் நோக்கங்கள்:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் அகற்றுவது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872….
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான தரநிலைகளை நிர்ணயித்தல்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் அவ்வப்போது அவற்றை மறுமதிப்பீடு செய்தல்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கண்டறிவதற்கும் அதை அகற்றுவதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.
சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்து தண்டனை வழங்குதல்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 கீழ், மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தேசிய வாரியம் (National Board for Environment Protection) மற்றும் மாநில அரசுகள் மாநில வாரியம் (State Boards for Environment Protection) ஆகியவற்றை அமைத்துள்ளது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.
அரசியலமைப்பின் 42 வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அடிப்படைக் கடமைகள் பட்டியலில் காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் கடமையாக கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 சட்டத்தை மீறினால் 5 ஆண்டு சிறைவாசம் அல்லது 1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இவ்விரண்டும் தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |