இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872….

Advertisement

Indian Contract Act 1872

இந்திய குடிமக்கள் ஆகிய நாம் நமது நாட்டில் உள்ள சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது நமது கடமை. அந்த சட்டங்கள் நமக்கு சரியான சமையத்தில் துணைபுரியும். அனைத்து விதமான செயல்களும் சட்டத்தினை பின்பற்றியே நடக்கின்றது. நமக்கு தேவையான சலுகைகள், நமது கடமைகளை நமக்கு சட்டம் தெளிவாக விளக்குகிறது. அந்த வகையில் இன்று இந்திய ஒப்பந்த சட்டம் 1872 பற்றி தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் எதோ ஒரு சூழ்நிலையில் ஒப்பாதங்களில் ஈடுபடுவோம். அவற்றில் உள்ள சாதக பாதகங்கள்
சில சமயம் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. அதில் உள்ள பிரச்சனைகள் தெரியாமல் நாம் அதில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும். அதில் இருந்து விடுபட வந்த சட்டம் தான் இந்திய ஒப்பந்த சட்டம் 1872 ஆகும். வாருங்கள் INDIAN CONTRACT ACT 1872 பற்றி தெரிந்துகொள்ளவோம்.

Indian contract act 1872

இந்திய ஒப்பந்தச் சட்டம் நமது நாட்டின் மிகப் பழமையான வணிகச் சட்டங்களில் ஒன்றாகும்.

இந்த சட்டம் செப்டம்பர் 1, 1872 இல் நடைமுறைக்கு வந்தது.

இந்திய ஒப்பந்த சட்டம், ஜம்மு & காஷ்மீர் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய சட்டமாகும்.

இந்த சட்டம் இந்தியாவில் ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தில் 266 பிரிவுகள் உள்ளன.

இந்த சட்டத்தில் உள்ள மிக முக்கியமான பிரிவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த சட்டத்தில் உள்ள 266 பிரிவுகளில், முதல் 75 பிரிவுகள் ஒப்பந்தத்தின் பொதுக் கோட்பாடுகள் குறித்து கூறுகிறது.

மற்ற பிரிவுகள், தனிவகை ஒப்பந்தங்கள் (Special Contracts) சிறப்பு ஒப்பந்தங்கள், ஈட்டுறுதி ஒப்பந்தம் மற்றும் பொறுப்புறுதி ஒப்பந்தம் (Indemnity and Gurantee), ஒப்படைவு (Bailmant), முகவாண்மை (Agency) ஆகியவற்றை விளக்குகிறது.

மேலும், சரக்குகள் விற்பனை (Sale of Goods), கூட்டாண்மை ஒப்பந்தம் (Partnership) பற்றிய பிரிவுகள் தற்போது இந்திய ஒப்பந்த சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு தனி சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் (Contract): பிரிவு 2 (b) 

சட்டத்தால் அமல்படுத்தக் கூடிய, இருதரப்பினருக்கும் இடையை ஏற்படும் உடன்பாடே ஒப்பந்தம் ஆகும்.

பரிவுரை அல்லது முனைவு (Proposal or Offer): பிரிவு 2 (a)

ஒரு செயலை செய்ய அல்லது செய்யாமலிருக்க ஒருவர் மற்றோரிவரிடம் கூறி ஒப்புதலை பெற விரும்பினால் அது பரிந்துரை எனப்படும்.

ஏற்பு (Acceptance): பிரிவு 2.(b)

அவ்வாறு பரிவுரை செய்யப்பட்ட பின் வேறொருவர் அதனை ஏற்றுக்கொள்ளும் செயல் தான் ஏற்பு எனப்படும்.

உறுதியுரை (Promise): பிரிவு 2 (b),(c)

ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிவுரையே உறுதியுரை ஆகும்.

மறுபயன் (Consideration): பிரிவு 2 (d)

உறுதியுரையை ஏற்பவரோ அல்லது வேறு ஒருவரோ, உறுதியுரைக்காக செய்யப்படும் கைம்மாறு மறுபயன் எனப்படும்.

தகுதியில்லா உடன்பாடு (Void agreement): பிரிவு 2(g)

சட்டப்படி அமல் படுத்த முடியாத இந்த உடன்பாடு தகுதியில்லா உடன்பாடாகும்.

தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் (Voidable agreement): பிரிவு 2 (i)

ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடியவர்களில் யாரோ ஒருவர் விரும்பினாலும் தவிர்க்க இயலும் என்றால் அத்தகைய ஒப்பந்தம் இவ்வகையாகும்.

செல்லத்தகாத ஒப்பந்தம் (Void contract): பிரிவு 2 (j)

ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்த இயலாத ஒப்பந்தம் செல்லத்தகாத ஒப்பந்தம் ஆகும்.

இழப்பீடு:

இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் பிரிவு 74 இன் படி, சட்டத்தினை மீறும் நபர் எதிர்தரப்பினருக்கு அவரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல் இருப்பது, ஒப்பந்தத்தை மீறுவது போன்றவைக்கும் இந்த சட்டத்தில் அபராதம் அல்லாமல் இழப்பீடாக வசூலிக்கப்படும்.

இழப்பீடு வழங்காத பட்சத்தில் அவர் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அவருக்கும் சிறை தண்டனை அல்லது சொத்துக்களை முடக்கும் படி ஆகலாம்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement