தண்டனை சட்டம் 124 மற்றும் 124A பற்றிய விளக்கம்
நாம் எத்தனையோ சட்டங்களை பற்றி படித்து இருப்போம் அல்லது அந்த சட்டங்களை பற்றி மற்றவர்கள் பேசும்போது தெரிந்து இருப்போம். அத்தகைய சட்டங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு விதமான தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நமது Law பதிவில் தண்டனை சட்டம் 124 மற்றும் 124A-வின் கீழ் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அந்த குற்றம் என்ன மற்றும் அந்த குற்றத்திற்கு எந்த மாதிரி தண்டனை அளிக்கப்படும் என்பது பற்றி விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?
IPC Sec 124 in Tamil:
உயர்ந்த அரசு பணியில் இருக்கும் நபர் அவருடைய கடமைகளை செய்யும் போது மற்றொருவர் அந்த கடைமையை செய்ய விடாமல் மிரட்டினாலோ, கட்டாய படுத்தினாலோ, நேரடியாக தாக்க முயன்றாலோ அல்லது மறைமுகமாக தாக்க முயன்றாலோ அது தண்டனை சட்டம் 124-ன் படி குற்றமாகும்.
இத்தகைய குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு IPC Sec 124-ன் கீழ் 7 வருடம் நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை அல்லது குறிப்பிட்ட கால அளவிலான சிறை தண்டனை அளிக்கப்படும். சில நேரத்தில் சிறை தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? |
IPC Section 124A in Tamil:
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசின் மீது ஒரு நபர் கடிதம் மூலமாகவோ அல்லது வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் பொய்யான முறையில் அவதூறாக செயல் பட்டாலோ அல்லது செயல்பட முயன்றாலோ அது இந்திய தண்டனை சட்டம் 124A- ன் படி குற்றமாகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு அபாரதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபாரதத்துடன் கூடிய 3 வருட சிறை தண்டனை குற்றங்களுக்கு ஏற்றவாறு IPC Section 124A- கீழ் தண்டனை அளிக்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2-யின் விளக்கம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |