இந்திய அரசு படை வீரரின் சீருடையை தவறான நோக்கத்தில் அணிந்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Advertisement

IPC Section 138 and 140 in Tamil

நமது நாட்டில் நடக்கும் பல வகையான குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தான் உருவாக்கப்பட்டது இந்த இந்திய தண்டனை சட்டம். அப்படி நமது சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் நமது இந்தியர்களிடம் இல்லை என்பதே உண்மை.

அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்டப்பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 138 மற்றும் 140 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..!

இந்திய தண்டனை சட்டம் 136 மற்றும் 137 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்

IPC Section 138 in Tamil:

எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படையில் உள்ள ஒரு அலுவலர் அல்லது ஒரு வீரரை ஏதேனும் ஒரு கீழ்ப்படியாமை செயலை செய்யுமாறு தூண்டுதல் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் 133, 134 மற்றும் 135 ஆகியவற்றுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்

IPC Section 140 in Tamil:

எவரேனும் ஒருவர் இந்திய அரசின் தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரரால் பயன்படுத்தப்படும் சீருடையை தவறான உள்நோக்கத்துடன் அணிதல் அல்லது அடையாள சின்னத்தை கொண்டு செல்லல் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் 500 ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் 128,129 மற்றும் 130-க்கான விளக்கம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement