IPC Section 133 to 135 in Tamil
நமது இந்தியாவில் மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பாற்றுவதற்காக தான் இந்திய தண்டனை சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களான நமக்கு நமது இந்திய சட்டம் பற்றியும் அதில் உள்ள சட்ட பிரிவுகள் பற்றியும் சரியான புரிதல் இல்லை என்பது கசப்பான உண்மை. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்டப்பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருக்கின்றோம்.
அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 133, 134 மற்றும் 135 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய தண்டனை சட்டம் 128,129 மற்றும் 130-க்கான விளக்கம்
IPC Section 133 in Tamil:
யாரேனும் ஒருவர் இந்திய அரசின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் உள்ள ஒரு அலுவலரை தனது பணியை சரியாக செய்ய விடாமல் தடுத்து அவரின் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றால் அது குற்றமாகும்.
இந்த குற்றத்தை மேற்கொள்பவருக்கு மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
IPC Section 134 in Tamil:
யாரேனும் ஒருவர் இந்திய அரசின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் உள்ள ஒரு அலுவலரை அவரது பணியை சரியாக செய்யவிடாமல் தடுத்து அவரின் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றால் மற்றும் அந்த முயற்சியால் அவர் தாக்கப்பட்டார் என்றால் அது குற்றமாகும்.
இந்த குற்றத்தை மேற்கொள்பவருக்கு ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய தண்டனை சட்டம் 121,122 மற்றும் 123-க்கான விளக்கம்
IPC Section 135 in Tamil:
யாரேனும் ஒருவர் இந்திய அரசின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் உள்ள ஒரு அலுவலரை தனது பணியில் இருந்து நீங்க சொல்லி கட்டாயபடுத்துதல் குற்றமாகும்.
இந்த குற்றத்தை புரிபவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> லஞ்சம் வாங்குபவர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |