தண்டனை சட்டம் 64 மற்றும் 66-ன் படி உள்ள குற்றங்கள் என்னென்ன..?

Advertisement

தண்டனை சட்டம் 64 மற்றும் 66 பற்றிய விளக்கம்

மனிதர்களாகிய நாம் அனைவரும் நிறைய வகையான செய்திகளை காலத்திற்கு ஏற்றவாறு தெரிந்து வைத்து இருக்கிறோம். ஆனால் அதில் சிறிய அளவிலாவது சட்டத்தை பற்றி தெரியுமா.? என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்வார்கள். அத்தகைய சட்டம் பற்றி நாம் ஓரளவாவது அறிந்து இருக்க வேண்டும். ஆகையால் உங்களுக்கு பயனளிக்கும் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 64 மற்றும் 66-ன் படி கீழ் உள்ள குற்றங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

Section 64 IPC in Tamil:

ஒரு நபர் குற்றம் செய்யும் போது தண்டனை சட்டம் 64-ன் கீழ் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும். சில நேரத்தில் குற்றம் பெரிய அளவில் இருந்தால் சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்.

அது மாதிரி குற்றவாளிக்கு சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் போது குற்றவாளி அபராத தொகையினை மட்டும் செலுத்த தவறினால் அதற்கு என்று தனியாக தண்டனை அளிக்கப்படும் உரிமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது.

குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனை முடிவடையும் காலம் வந்தாலும் அபராதம் செலுத்த தவறியதற்காக IPC Section 64- ன் படி குற்றவாளியை விடுதலை செய்ய மாட்டார்கள். 

இந்திய தண்டனை சட்டம் 378 மற்றும் 379-ன் உண்மை என்ன தெரியுமா..?

Section 66 IPC in Tamil:

அபராதம் செலுத்த தவறிய குற்றத்திற்கான தண்டனை IPC Section 66-ல் சொல்லப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்த தவறிய குற்றத்திற்காக தண்டனை சட்டம் 66-ன் படி குற்றத்திற்கு ஏற்றவாறு அதற்கான தக்க சிறைத்தண்டனை விதிக்கப்படும். அப்படி நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் குற்றவாளி ஏற்றக்கொள்ள வேண்டும் என்று Section 66 IPC-ல் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் 👇 👇 👇

506 2 IPC in Tamil
IPC 376 in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

Advertisement