Daily Skin Care Routine for Glowing Skin at Home in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையின் காரணமாக நமது ஆரோக்கியத்திற்கும் நமது சருமத்திற்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனை சரி செய்வதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனாலும் அவையாவும் நாம் எதிர்பார்த்த பலனை அளித்திருக்காது. அதனால் நமது சருமத்தை சரியாக பராமரித்து அதனை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றி கொள்ள உதவும் இயற்கையான முறையில் சிறந்த 4 வழிகளை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள 4 வழிகளை பின்பற்றி உங்களின் சருமத்தை நன்கு பராமரித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Daily Skin Care Routine Home Remedies in Tamil:
உங்களின் சருமத்தை இயற்கையான முறையில் பொலிவு பெற உதவும் 4 வழிகளை பற்றி இங்கு விரிவாக இங்கு காணலாம் வாங்க
மஞ்சள்:
மஞ்சளில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. அதனால் இதனை நமது சருமத்தில் தினமும் பயன்படுத்தி வந்தோம் என்றால் நமது சருமத்தில் எந்த ஒரு பாக்டீரியா தோற்றும் ஏற்படாது.
அதாவது இதனை நாம் குளிக்க செல்லுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் இதனை உளுத்தம்பருப்பு மாவு மற்றும் தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து உங்களின் முகம் முதல் பாதம் வரை தடவி வைத்திருந்து பிறகு குளித்திர்கள் என்றால் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெறும் பளபளப்பாகும்.
தேன்:
தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
அதாவது சிறிதளவு தேனை எடுத்து அதனை உங்களின் சருமத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நன்கு வெது வெதுப்பான தண்ணீரை கொண்டு குளித்திர்கள் என்றால் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெரும்.
கோடை காலத்திலும் உங்களின் சருமம் பொலிவுடன் காட்சியளிக்க அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க போதும்
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய்யானது சருமத்திற்கு ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெய்யானது சருமத்தை ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் குணமாக்கும்.
இதனை இரவு படுக்கைக்கு செல்லுவதற்கு முன்னால் உங்களின் சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டினை நினைத்து அதனை பயன்படுத்தி உங்களின் சருமத்தில் உள்ள எண்ணையை துடைத்து கொள்ளுங்கள். இதனாலும் உங்களின் சருமம் பளபளப்பாகும்.
ஆரஞ்சு பழச்சாறு:
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்று ஆகும். அதனால் இதனின் சாற்றினை நமது சருமத்தில் பயன்படுத்தினால் நமது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி நமது சருமத்தை மிகவு பாதுகாத்து வைத்து கொள்ளும்.
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை எடுத்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து உங்களின் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் சருமம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பொலிவு பெரும்.
உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |