நரைமுடி கருமையாக மற்றும் தலை முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பு

Advertisement

நரைமுடி கருமையாக மற்றும் தலை முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பு – Hair Care Oil for Hair Growth in Tamil

இன்றைய கால கட்டத்தில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் நிறையவே இருக்கிறது. அதனை சரி செய்வது கடைகளில் பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஏமாற்றத்தை தவிர வேறு எந்த ஒரு பலன்களும் கிடைப்பது இல்லை. பிரச்சனை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் இயற்கை முறையை மேற்கொள்ளலாம். நீங்கள் இயற்கையான முறையில் நரை முடி பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய விரும்பினால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான், நரைமுடி கருமையாக மற்றும் தலை முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பு முறையை பற்றி தான் இப்பொழுது நாம் படித்தறிய போகிறோம். இந்த ஹேர் ஆயில் உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கும் சரி வாங்க இந்த ஹேர் ஆயில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் ஆயில் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை – ஒரு மடல்
  2. சின்ன வெங்காயம் – மூன்று
  3. வேப்பிலை – ஒரு கொத்து
  4. கருவேப்பிலை – ஒரு கையளவு
  5. கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
  6. வெந்தயம் – ஒரு ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

 

தயார் செய்யும் முறை:ஹேர் ஆயில்

அடுப்பில் ஒரு பழைய வாணலியை வைத்து அதனுடன் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

வாசனை வந்தபிறகு அதனுடன் கருவேப்பிலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வதக்கவும்.

பின் வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்துகொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும், எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

முதலில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து 3 நிமிடங்கள் கிளறிவிடவும்.

பிறகு இடித்த சின்ன வெங்காயம், சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த கற்றாழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிழவிடுங்கள்.

15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை எண்ணெயை நன்றாக காய்ச்ச வேண்டும், பிறகு அதனுடன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிவற்றால் எதாவது ஒரு எண்ணெயை நான்கு ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு எண்ணெயை 1/2 மணி நேரம் நன்கு ஆறவிடவும். 1/2 மணி நேரம் கழித்து காய்ச்சிய எண்ணெயை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்

பயன்படுத்து முறை:

இவ்வாறு தயார் செய்த எண்ணெயை இரண்டு நாட்களுக்கு பிறகு தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்திவரலாம். எண்ணெயை தலையில் தடவி கொண்டை போட்டுக்கொள்ளுங்கள், பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலையை பின்னிக்கொள்ளலாம்.

உங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் இந்த எண்ணெயை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கலாம்.

அதேபோல் நீங்கள் இரவிலேயே இந்த எண்ணெயை தலையில் தடவி கொஞ்சம் நேரம் தலைமுடி வேர்களுக்கு மசாஜ் செய்து படுக்கவும் பின் மறுநாள் காலை தலை அலசலாம் அல்லது தலை சீவிக்கொள்ளலாம்.

மேல் கூறப்பட்டுள்ள முறைகளில் நீங்கள் ஏதாவது  ஒன்றை பின்பற்றினாலே உங்களுக்கு ஒரே மாதத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும். அதாவது நரைமுடி கருமையாகும், முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கைகளில் கொள்ளாத அளவுக்கு முடி வளர்ச்சி அதிகமாக..! குப்பையில் எரியும் பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement