முடி கொட்டுவதை நிறுத்தி புதுமுடி வளர வைக்க இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்க ..!

Onion Hair Oil Homemade in Tamil

Onion Hair Oil Homemade in Tamil

அனைவருக்குமே முடி கொட்டுதல் பிரச்சனை இருக்கும். முடிகொட்டுதல் பிரச்சனையை தடுக்க அனைவரும் பல முறைகளை கையாண்டு வருகின்றனர். எனவே அனைவருக்கும் பயனுள்ள வகையில், முடி கொட்டுவதை தடுத்து புதுமுடியை வளரவைக்கும் இயற்கையான எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். என்னதான் முடி வளர்ச்சிக்காக நாம் செயற்கை முறையில் தயாரித்த எண்ணெயை பயன்படுத்தினாலும் அது நீண்ட காலத்திற்கு நீடிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கும். ஆனால் என்றுமே நமக்கு தீங்குவிளைக்காத ஒன்று இயற்கை முறையில் உள்ள பொருட்கள் மட்டுமே. எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய எண்ணெய் தயாரிப்பது பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Onion Hair Oil At Home in Tamil:

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • வெங்காயம்- 1 (அல்லது சின்ன வெங்காயம் 7)
  • தேங்காய் எண்ணெய்- 200 மிலி
  • விளக்கெண்ணெய்- 50 மிலி

எண்ணெய் தயாரிக்கும் முறை:

வெங்காயத்தை எடுத்து கொள்ளவும்:

 வெங்காய எண்ணெய் செய்வது எப்படி

முதலில் வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். இப்போது இதனை பொடியாக  துருவி எடுத்து கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும்:

 Onion Hair Oil Homemade in Tamil

இப்போது ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு, இதனுடன் பொடியாக துருவி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

நீங்களே பார்த்து ஆச்சரியப்படுகிற அளவிற்கு முடி வளர்ச்சி ஆக வேண்டுமென்றால் தேங்காய் எண்ணெயில் இந்த ஒன்றை கலந்து தடவுங்க..

எண்ணெயை சூடுபடுத்தவும்:

 how to make onion hair oil for hair growth in tamil

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை கொதிக்கவிடுங்கள். எண்ணெய் கொதித்து வெங்காயம் சிவந்து வரும்வரை கொதிக்கவிடுங்கள். அதாவது, எண்ணெய் பிங்க் நிறத்தில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து எண்ணெயை நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

பிறகு, எண்ணெய் நன்றாக ஆறியதும் ஒரு பாட்டிலில் எடுத்து ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

 how to make natural hair oil at home for hair growth in tamil

அப்ளை செய்யும் முறை:

முதலில் தலைமுடியினை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். பிறகு முடியை வாகு எடுத்து இருபுறமாக பிரித்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த எண்ணெயை எடுத்து முடியின் ஒவ்வொரு புறமாக அப்ளை செய்து கொள்ளுங்கள். எண்ணெய், முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து 1/2 மணிநேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு போட்டு தலையை அலசி விடலாம்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று புது முடி அடர்த்தியாக வளர தொடங்கும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்..  இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil