இந்த கோடை காலத்தில் மோர் பந்தல் வைத்து சம்பாதிக்க தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள்..

Advertisement

மோர் பந்தல் அமைக்க எவ்வளவு செலவாகும்

இந்த கோடை காலத்தை எப்படி சமாளிப்பதற்கு வெளியில் சென்றாலே குளிர்பானங்களை தேடி போகின்றோம். இதில் முதலில் இருப்பது மோர் தான், அடுத்து தான் லெமன் ஜூஸ், ஐஸ்கிரிம், இளநீர், தர்பூசணி போன்றவை குடிப்போம். இந்த கோடைகாலத்தில் ஏற்ற தொழில்களை செய்து அதன் மூலம் சம்பாதிக்கலாம். அதற்கு எந்த தொழில் செய்ய வேண்டும், அந்த தொழில் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்னை மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று அறிந்து அந்த தொழிலை செய்ய வேண்டும். ஏனென்றால் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்து சேமித்த பணத்தை விட அதிகமாக அதாவது கடன் வாங்கி தொழிலை ஆரம்பித்தால் அதில் லாபமும் வரும், நஷ்டமும் வரும். அதனால் தொழில் செய்வதற்கு முன்னாடியே உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் மோர் பந்தல் வைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மோர் பந்தல் அமைக்க தேவைப்படும் பொருட்கள்:

  • மோர் – ஒரு நாளைக்கு 5 லிட்டர்
  • தள்ளுவண்டி – 1
  • வெங்காயம் – 20
  • பச்சை மிளகாய் – 20
  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • கப்- மொத்தமாக வாங்கி கொள்ளவும்
  • உப்பு- தேவையான அளவு
  • பெரிய பானை- 1

5 நபர்களுக்கு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா..?

செலவு எவ்வளவு ஆகும்:

ஒரு லிட்டர் மோரின் விலை 50 ரூபாய், அப்போ 5 லிட்டர் மோரின் விலை 250 ரூபாய் செலவாகும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி வாங்குவதற்கு 20 ரூபாய் தேவைப்படும்.

தள்ளுவண்டி மற்றும் பானை வாங்குவதற்கு 3000 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

ஒரு நாளைக்கு மோர் பந்தலில் செலவு என்று பார்த்தால் தோராயமாக 300 ரூபாய் என்று வைத்து கொள்வோம். ஆனால் வருமானமாக 2000 ரூபாய் கிடைக்கும். இவை தோராயமாக தான் பதிவிட்டுள்ளோம், இதை விட அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம்.

5 பேருக்கு பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிஞ்சிக்கோங்க..!

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement