How to Get Out of Scolding by Others in Tamil nadu
வீட்டில் அல்லது பள்ளி, கல்லூரி அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி யாராவது திட்டினால் அன்றைய நாள் முழுவதும் அதையே நினைத்து கொண்டிருப்போம். அதுமட்டுமில்லமால் எந்தவேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். சில பேர் என்ன திட்டினாலும் அதிலிருந்து ஈசியாக வெளியே வந்து விடுவார்கள். சில பேர் என்ன நடந்தாலும் அதிலிருந்து வெளியே வராமல் கஷ்டப்படுவார்கள். அதனால் தான் இந்த அப்பதிவில் மற்றவர்கள் திட்டினால் அதிலிருந்து வெளியே வருவதற்கான ஐடியாக்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
லேசாக எடுத்து கொள்ள வேண்டும்:
உங்களிடம் ஒருவர் குறை கூறினாலும் சரி, பாராட்டினாலும் சரி அதனை ஒரே மாதிரியாக எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களை இகழந்தாலும் கவலை அடையாதீர்கள், அதுவே உங்களை பாராட்டினாலும் மகிழ்ச்சியடைதீர்கள். எப்போதும் ஒரே நிலையாக இருப்பதற்கு கற்று கொள்ள முயற்சியுங்கள். அதவாது டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ளுங்கள்.
உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?
கற்பனை செய்யாதீர்கள்:
ஒருவர் திட்டினால் அதனை கற்பனை செய்யாதீர்கள். அவர்கள் நேரிடையான வார்த்தைகளில் கூட திட்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் அதனை அப்படி நினைத்து திட்டிருப்பார்களோ என்று கற்பனை செய்வீர்கள். இது போல கற்பனை செய்வது கூட உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
பயம்:
உங்களுக்கு ஒரு விஷயம் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும், இந்த வேலையை செய்தால் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களா என்று நினைத்து பயப்படுவீர்கள். அதனால் இந்த பயத்தினை விட்டு விடுங்கள். உங்களின் வேலையானது உங்களுக்கு திருப்பதியை கொடுக்கின்ற அளவிற்கு இருந்தாலே போதுமானது.
குறை கூறுவது:
நீங்கள் முதலில் மற்றவர்களை பற்றி குறை கூறுவதை நிறுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யும் வேலைகளில் ஏதும் தவறு ஏற்பட்டால் கூட அதிலிருந்து மற்றவர்கள் செய்த தவறினால் தான் அந்த தவறு ஏற்பட்டது என்று மற்றவர்களை இழுப்பதை தவிர்த்து விட வேண்டும். உங்களின் குணத்தை பொருத்தித்து தான் மற்றவர்களிடம் உங்களிடம் பேசுவார்கள்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |