Bitter Gourd Multipurpose in Tamil
இன்று நாம் பார்க்க போகிறது என்னவென்றால் இந்த பாகற்காய் பற்றிய தகவல் நிறைய தகவல் உள்ளது. அதனை பற்றி நாம் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக நாம் அனைவரும் காய்கறி கடைகளுக்கு செல்வோம். ஆனால் இந்த பாகற்காயை மட்டும் வாங்குவதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டீர்கள். ஏனென்றால் அது அதிகம் கசப்பாக இருக்கும்..! இந்த பாகற்காயை வைத்து நிறைய விதமாக பயன்படுத்துவார்கள். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
Bitter Gourd Multipurpose in Tamil:
பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பயன்படுத்தாத (Rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த பாகற்காய் இரண்டு வகையான பாகற்காய் அது ஒன்று பெரிய பாகற்காய், மற்றொன்று கொடி பாகற்காய் ஆகும்.
பாகற்காயில் உள்ள சத்துக்கள்:
இந்த பாகற்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. என்னவென்று பார்க்கலாம் வாங்க..! பாகற்காயில் நியாசின் (வைட்டமின் பி3), பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6) போன்ற பி வைட்டமின்களும் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மெக்னீசியம் போன்ற தாதுக்களும் கனிசமான அளவு உள்ளன.
உங்க வீட்ல சுண்டைக்காய் செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!
பாகற்காய் மருத்துவ பயன்கள்:
- சருமத்தை பாதுகாக்கும்.
- சர்க்கரை நோயை குணப்படுத்த
- உடல் எடையை குறைக்க
- அல்சரை குணப்படுத்த
- இதயநோய் வரமால் தடுக்க இன்னும் நிறைய நோய்கள் வாராமல் தடுக்க உதவுகிறது.
உப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இது தெரியாம சமையலுக்கு பயன்படுத்தாதீர்கள்.
சமையலுக்கு உதவும்:
இந்த பாகற்காயை வைத்து நிறைய விதமான உணவுகளை செய்யலாம். பொரியல், குழம்பு, பாகற்காய் பொரியல், பாகற்காய் வறுவல், பாகற்காய் தொக்கு, பாகற்காய் ஜூஸ், பாகற்காய் வைத்து ஹேர் பேக் என இதனை தலையில் அப்ளை செய்வதை விட அதிகம் சாப்பிடுவதால் தலை முடி வளரும், அதேபோல் சருமத்தை அழகாக வைக்கும். கசப்பு உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகவே இனி காய்கறி கடைக்கு போனால் அங்கு இந்த பாகற்காயை வாங்காமல் வாராதீர்கள்..!
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |